உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

கோகிலாம்பாள் கடிதங்கள்

61

அங்ஙனமானால் சிறு வயசுள்ள இந்த அம்மாவும் பிள்ளை யில்லாமையால் புத் என்னும் நரகத்திற்குச் சென்றது விழாமலிருக்கும் பொருட்டு, இந்த அம்மாவையும் மறுபடியும் ஏன் கல்யாணஞ் செய்து கொடுக்கப்படாது? உங்கள் வைதிகப் பார்ப்பாருக்கு இது புத்தியிற் படாதது ஏன்?” என்று சிறிது கோபக் குறிப்புத்தோன்ற வினாவினார்.

66

‘ஆண்மக்களே எல்லா நலங்களையும் சுதந்தரங்களையும் பெற வேண்டும்; பெண்மக்கள் எப்படிப் போனாலும் எவ்வளவு துன்பத்திற்கு உள்ளானாலும் பாதகமில்லை. பெண் ஜென்மம் பாப ஜென்மந்தானே என்று பிழைபட எண்ணுஞ் சுயகாரியப் புலிகளான வைதீகப் பார்ப்பார் புத்திக்கு இது தோன்றாமற் போவது சகசந்தானே” என்று என் மாமனார் விடை கூறினார்.

இதற்குட் பகலவன் மேற்றிசையில் மறைய, மாலைப் பொழுது வந்தமையால் அவர்கள் ஏறிவந்த வண்டிக்காரன் அப்பாரசிக கனவானிடம் அணுகிக் குதிரையை வண்டியிற்பூட் அனுமதி கேட்டான் என் மடிமீதும் என் பக்கத்திலும் இருந்தசிறு மதலைகள் இரண்டும் அந்திக்காலத்துத் தாமரைகளைப் போலக் கண் உறங்கி விட்டன. ஆதலால், அக்குழவிகளை என்னிடமிருந்து பிரித்தெடுத்துக் கொள்வது அவர்களுக்கு எளிதாய் இருந்தது. நாளைப் பிற்பகலில் எங்களிருப்பிடத்திற்கு வந்து எங்களைக் காண்பதாகச் சொல்லி எங்கள் வீட்டடையாளத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டு அவர்கள் மிகுந்த அன்போடும் எங்களிடம் விடைபெற்றுக் கொண்டு ஏகினர். திரும்பவும் அவர்களைக் காணலாம் என்னும் நம்பிக்கையால் அவர்கள் பிரிந்ததைப் பற்றி நாங்கள் வருத்தம் அடையவில்லை.

அன்று உவா நாளுக்கு முந்தியதாகையாற் பெரும்பாலுங் கலை நிரம்பிய இள மதியம் பால் நிரம்பிய பளிங்குக்குடம் போலத் தளதளவென்று கடலின்மேல் வானத்தில் திகழ்ந்தது; கடலின் நீர்ப்பரப்பெல்லாம் அக்குடத்தினின்றும் ஒழுகிய பால் படர்ந்த தென்ன வெண்மையாக மிளிர்ந்தது; ஓங்கியெழுந்து நுரைத்துவரும் அலைகளானவை கீழ்வழிந்தபால் பொங்கி வழிவதனையே ஒத்திருந்தன; இவ்வழகிய காட்சியைப் பார்த்துக் கொண்டு நாங்கள் இருக்கையில் எனக்கு உம்மைப் பற்றிய நினைவு மிகவுந் திறப்பட்டுத் தோன்றியது.நீண்ட நாளாக உமது அருமை திருக்கரலிகிதம் வருவதற்கு இடம் இல்லாதிருப்பதை உணர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/90&oldid=1582048" இலிருந்து மீள்விக்கப்பட்டது