உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

❖ LDMMLDMELD -14❖

போடுகிறார்கள். இவைகளோடு நாலாயிரு ரூபாவும் உமக்கும் வாங்கித் தருகிறோம் என்று சொல்லி அவனுடைய சம்மதத்தைப் பெற்றுவந்து என் மூத்த மகனிடத்தில் ஏராளமான தொகையைப் பிடுங்கிக் கொண்டு போய்க் கொடுக்கவே அந்தத் தொகையைப் பார்த்த அவனும் பெண்ணைக் கொடுத்து விட்டான். வயசானவனுக்குப் பெண்ணைக் கொடுப்பதில் இவள் தாய் முதலிற் பிரியம் இல்லாதவனாய் இருந்தாலும் தொகுப்பாய் நாலாயிர ரூபாவைப் பார்க்கவே அவளும் இந்தப் பெண்ணைக் கொடுக்கச் சம்மதப்பட்டு விட்டாள். என்ன செய்யலாம்! எல்லாருங் கூடி இவள் பாவத்தில் கையை வைத்தார்கள்! கல்யாணம் நடந்தபோது அந்தக் கொடுமையைப் பார்க்க எனக்கு மனம் இல்லாமையால் யான் மதுரைக்குப் புறப்பட்டுப் போய்விட்டேன். பிறகு ஒரு மாதங் கழித்துத்தான் இங்கே வந்தேன்” என்று துயரத்தோடு பேசினார்.

அதனைக்கேட்டு அந்த அம்மையார் வருத்தமும் சிறிது கோபமும் உடையவராகித், “தாதா, பிள்ளையில்லாதவர்கள் புத் என்னும் நரகத்திற்குப் போகின்றார்களென்றால், பிள்ளையில்லா தவர்கள் எவராயிருந்தாலும் அந்த நரகத்திற்குப் போக வேண்டியது தானே?” என்று வினாவினார்.

'எங்கள் புராண கதைப்படி பார்த்தால் அப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கின்றது” என்று மாமனார் விடை கூறினார்.

“அப்படியானால், பிள்ளையில்லாத ஆண்கள் புத் என்னும் நரகத்திற்குப்போகாமல் இருக்கும் பொருட்டு எழுபது வயது வரையில் எத்தனை தரம் வேண்டுமானாலும் சிறு குழந்தைப் பெண்ணைக்கூடக் கல்யாணம் செய்யலாம் என்றால் அங்ஙனமே பிள்ளையில்லாத பெண்களும் அந்த நரகத்திற்கு போகாம லிருக்கும் பொருட்டு எத்தனை தரமாயினும் கல்யாணம் செய்து கொள்ளலாமென்று ஏற்படுகின்றதன்றோ?” என்று அவ்வம்மை யார் மிகுந்த நுட்ப அறிவோடுங் கேட்டார்.

66

அவர்களின் நுண்ணறிவை வியந்து உடனே என் மாமனார் ‘ஆம் அம்மா. அப்படித்தான் கொள்ளவேண்டி வருகின்றது என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/89&oldid=1582047" இலிருந்து மீள்விக்கப்பட்டது