உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

59

கேள்விக்கு உடனே என் மாமனார் பின்வருமாறு விடை கூறுவாரானார்.

66

'அம்மா எங்கள் பிராமண சாதிக்குப் பொருளாசை என்பது இயற்கையாகவே அளவு கடந்து உள்ளது. மாதம் ஒன்றுக்கு ஐயாயிரம் ரூபா வரும்படியுள்ளவனாய் ஒருவன் இருந்தாலும் ஐம்பது மைலுக்கு அப்பாலே ஐந்து ரூபா பூரிகொடுக்கிறார் களென்றால் அதனை அவன் வாங்குகிறதற்குக் கட்டுச்சோறு தூக்கிக் கொண்டு கால்நடையாய்ப் போவான். இந்தத் துராசைக்குத் தப்பினவர் எங்களில் லட்சத்தில் ஒருவர் இருப்பாரோ என்பது கூட சந்தேகம். பணங்கொடுக்கிறவன் பறையனாயிருந்தாலும் அவன் எவ்வளவு குணக்கேடனும் தகாத செய்கையுடையவனுமாய் இருந்தாலும் அவன் வேண்டிய காரியங்களெல்லாம் செய்ய முந்தி வந்து நிற்பார்கள்; தம்மோடொத்த பிராமணனாயினும் அவன் கையிற் காசில்லாத வறியவனாயிருந்தானேல் அவன் குணத்தாலும் ஒழுக்கத்தாலும் எவ்வளவு உயர்ந்தவனானாலும் அவனைத் திரும்பியும் பாரார். கையிற் பணமுள்ளவர்கள் சுபாவமே இப்படியிருந்தால், எங்களிற் பணமில்லாத ஏழைகள் எவ்வளவு ஆசையுடையவர்களா யிருப்பார்கள் என்பதை யான் சொல்ல வேண்டுவதில்லை. இந்தப் பிள்ளையைப் பெற்றவர்களோ அத்தனை ஏழைகள் என்று சொல்லுவதற்கும் இடமில்லை; இவள் தாயைப் பெற்ற பாட்டனாரும் பெருஞ் செல்வவான். இவள் தகப்பனைப் பெற்றவரும் மிகுந்த சொத்து உள்ளவர். இவர்கள் இருவரும் இவர்கள் பெண்சாதிமார்களும் நிரம்பவும் நல்லவர்கள். நல்ல செய்கையும் உடையவர்கள். ஆனால் இவள் தகப்பனோ அத்தனை நல்ல குணமும் நல்ல செய்கையும் உடையவன் அல்லன்; அதனால் அவ்வளவு சொத்துக்களிலும் முக்கால்வாசிக்கு மேல் செலவழித்து விட்டான். என்றாலும், மிச்சம் இருக்கின்ற சொத்தே இவனுக்கும் இவன் தலைமுறைக்கும் போதும் அனால் காசாசை என்கின்ற பேய் அவனைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டது. என் மூத்த மகனிடத்தில் காசு பிடுங்கித்தின்னும் வைதிகப் பார்ப்பார்கள் அவனிடம் போய் உம்முடைய பண்ணுக்கு நல்லவரன் இருக்கிறான்; மாதம் ஒன்றுக்கு ஆயிர ரூபாவுக்கு மேல் வரும்படி உள்ளவன். வயது நாற்பத்தஞ்சுதான்; அதிகமில்லை. உமக்குக் கல்யாணச் செலவு கொஞ்சமும் இல்லை. திவ்யமான ஆபரணங்கள் எல்லாம் மாப்பிள்ளை வீட்டுக்காரரே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/88&oldid=1582046" இலிருந்து மீள்விக்கப்பட்டது