உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

மறைமலையம் -14

கொண்டார்கள். தனக்கு மூன்றாம் முறை விவாகம் செய்து காள்ளப் பிரியம் இருப்பதை என்னிடம் ஒருநாள் என் மூத்தமகன் தெரிவித்தபோது, உனக்கோ இப்போது நாற்பத்தைந்து வயதாகிறது.நம்முடைய சாதி வழக்கப்படி பத்து வயசுக்கு உட்பட்ட பெண்ணைத்தான் நீ கல்யாணம் செய்ய வேண்டி வரும்; பிறகு அப்பெண் புஷ்பவதியாகிறதற்கு ஐந்து வருஷம் ஆகும்; அப்போது உனக்கு ஐம்பது வயசாகிவிடும். மேலும் நீ நோயில் அடிக்கடி விழுகிறாய். உனக்குக் குழந்தை போலிருக்கும் ஒரு பெண்ணைக்கட்டி அந்தப்பாவத்தால் வரும் பெருநரகத்தை இந்த உலகத்திலேயே நீ அனுபவிப்பதைவிட பிள்ளையில்லாததனால் வருவதாகப் பணப்பேய்பிடித்த வைதிகப் பார்ப்பார் சொல்லும் நரகத்தில் இறந்தபின் போய்விழுவதே மெத்த நல்லது. ஆகையால் உனக்கு இனி விவாகஞ்செய்யத் னி தோலோதோல் நான் உட ன்பட மாட்டேன். என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டேன்.என் சொல்லைக் கேளாமலே அவன் இந்தப்பெண்ணை மணந்து இதன் பாவத்திற்

கையை

வைத்தான். இக்குழந்தையைக் கட்டும்போது இவளுக்கு வயது எழுதான். கல்யாணஞ் செய்த அந்த வருஷத்திலேயே இக்குழந்தையை விதந்துவாக்கி அவன் இறந்தொழிந்தான் என்று மிகுந்த அருவருப்போடும் மனவருத்தத் தோடும் என் மாமனார் விடைகூறி, இதில் அவர் மனம் மிகுதியாய்க் கலங்கினமையாற் சிறிதுநேரம் நிலத்தைப் பார்த்தபடியே தலை குனிந்திருந்தார்.

அப்போது அப்பாரசிகப் பெருமாட்டியார் பெருந்துயரம் நிகழப் பெற்றவராகி, "ஐயோ! பாவம்! இந்தக் குழந்தையின் நிலைமை இப்படியா ஆயிற்று!” என்று வருந்திச் சொல்லிப் பின்னர் என் மாமனாரைப் பார்த்துத், “தாதா, அவ்வளவு வயதான உங்கள் மூத்தமகனுக்க ஏழு வயதுக் குழந்தையைக் கொடுக்க இப்பெண்ணின் பெற்றோர்கள் எப்படி உடன் பட்டார்கள்?” ார்கள்?" என்று கேட்டார்கள்.

இந்த அம்மையாரவர்கள் பேசும்போதெல்லாம் இவர்கள் பேசும் விஷயங்களில் எனக்கு அவ்வளவாகக் கவனஞ்செல்ல வில்லை; இவர்கள் கணவரும் குழந்தைகளும் கொச்சையாகத் தமிழ்ப்பேச இவர்கள் மட்டும் இவ்வளவு தெளிவான தமிழ்ப் பேசுவதற்கு எங்ஙனங் கற்றுக்கொண்டார்கள் என்பதில் எனக்கு வியப்பு மிகுதியாயுண்டாயிற்று. இந்த அம்மையார் கேட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/87&oldid=1582045" இலிருந்து மீள்விக்கப்பட்டது