உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

57

L மாமனாரை நோக்கி, “அய்யா! எனக்கி யொரு சந்தேகம் வந்திருக்கு; அதெ உங்கொ எடம் கேக்கிரத்துககாக நீங்க நம்பௌ மன்னிச்சுக் கொள்ளணும்”, என்று சொல்லினார். மன்னிச்சுக்கொள்ளணும்”,

66

"அதைப்பற்றித் தாங்கள் சிறிதும் யோசிக்கவேண்டாம்; எதைப்பற்றி நீங்கள் கேட்கவேண்டுமானாலும் கேட்கலாம்; நான் சொல்லத் தயாரா யிருக்கிறேன்”, என்று மாமனார் பிரியத்தோடு சொன்னார்.

'வேறொண்ணு மில்லிங்கோ, இந்தம்மாவெ உங்க பேத்திப்பிள்ளேண்ணு நெனச்சோம்; ஆனாக்கோ, உங்க மரிமகண்ணு நீங்கோ சொன்னிங்களே?” என்று அக் கனவான் வினவினார்.

66

"ஐயா, இதுபுதிதாகச் சந்திப்பவர்கள் எவர்க்கும் சந்தேகத்தை உண்டுபண்ணத் தக்கதுதான். நியாயமாகப் பார்த்தால் இந்த அம்மா எனக்குப் பேர்த்திக்குப் பேர்த்தியாகவேண்டும்; இவளுக்கு இப்போது பத்தொன்பது வயதுதான் ஆகின்றது. எனக்கோ எண்பத்தைந்து வயது ஆகிறது. இக்குழந்தையை எனக்கு மருமகளென்றால் யாருக்குத்தான் சந்தேகம் உண்டாகாது! எனக்கு இருபத்தெட்டாவது வயதிற்பிறந்த மூத்தமகன் ஒருவன் இருந்தான். அவனுக்கு இரண்டு முறை விவாகம் செய்தேன். இரண்டு முறையும் அவனது துரதிர்ஷ்டத்தால் அவன் மனைவிகள் இறந்துபோனார்கள். அதன் பிறகு அவனுக்குக் கல்யாணம் செய்விக்க எனக்குச் சிறிதும் விருப்பம் இல்லை. அவனும் அரைவாசி பிரியம் இல்லாமலே இருந்தான். ஆனால், அவனுக்கு மாசம் ஒன்றுக்கு ஆயிரரூபாவுக்கு மேல் வரும்படி இருந்தது. சட்டப்படிப்பில் கெட்டிக்காரன். நியாயஸ்தலத்தில் வாதிப்பதில் வல்லவன். ஆனால், பிறர்பேச்சைக் கேட்பவன். காஞ்சம் சுயகாரியப்பிரியன். தன்னைப் புகழ்ந்து பேசுகிறவர் சொல்லுக்கு நிரம்பவும் செவிகொடுப்பவன்.இவனை எந்நேரமும் புகழ்ந்து பேசிக்கொண்டு இவனிடத்திற் காசுபிடுங்கித் தின்னும் வைதிகப் பார்ப்பார் சிலர் இருந்தனர். பிள்ளை இல்லாதவர்கள் புத் என்னும் நரகத்திற்கு போவார்களாதலால் எத்தனை தடவை யாயினும் ஓர் ஆண்மகன் கல்யாணம் பண்ண வேண்டுவது அவசியம் என்றும், எழுபது வயது வரையில் ஆண்கள் விவாகம் செய்து கொள்ளலாம் என்றும் அப்பாவிகள் அவனுக்கு அடிக்கடி சொல்லி அவனைத் தமது பாழும்பேச்சுக்கு உடன் படுத்திக்

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/86&oldid=1582044" இலிருந்து மீள்விக்கப்பட்டது