உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

56

மறைமலையம் -14

இந்த அம்மா நல்ல தமிழில் பிசிரில்லாமல் பேசியதைக் கேட்டு எனக்கு உண்டான வியப்பு இவ்வளவென்று சொல்ல முடியாது.இவர்கள் என்னளவில் வைத்த அன்பும், அதனை வெளியிட்டுக் கூறிய சொற்களும் என் உள்ளத்தை உருகச் செய்தன. இவர்கள் பேசியவுடனே, இவர்கள் கணவனார் 'அய்யா, நம்ப பெஞ்சாதி நம்பளெக் காட்டிலும் தம்பிள் நல்லாப் பேசுவா. நம்பளிக்கித் தம்பிள் நல்லாப்பேச வருறதில்லை. அதுக்காக நீங்கோ நம்பளே ரொம்ப மன்னிச்சுக்கொள்ளணும். இந்த அம்மாவே பார்த்த ஒடனே எங்க மூத்தபெண்தா சிரோடெ வந்திட்டான்னு நாங்க ரொம்ப ஆனந்தப்பட்டிருக் கிறோம். அய்யா, நீங்கோ மெத்த தயவுபண்ணி அடிக்கடி இந்தம்மாவெ நாங்க பார்க்கும்படி உபகாரம் பண்ணனும், அப்பொதா எங்க துக்கம்போவும்” என்று மிக்க பணிவோடு பேசினார்.

66

'ஐயா! உங்களையும், உங்கள் அருமை மனைவியாரான இந்த அம்மா அவர்களையும், உங்கள் குழந்தைகளையும் பார்க்கும்போது களங்கமின்றிப் பரிசுத்தராய் விளங்கும் ஒரு சிறு தேவ கூட்டத்தாரைப் பார்ப்பது போலவே எனக்கும் என் மருமகளுக்குந் தோன்றுகின்றது. உங்களைப்பார்த்த நிமிஷந் தொட்டே உங்களுடைய ஸ்நேகத்தைப் பெறவேண்டுமென்னும் அவா எங்களுக்கு மிகுதியாய் எழுந்தது; அதனாலேதான் நாங்கள் இவ்விடத்திற்கு வந்தோம். என் மருமகளைப் பார்த்து உங்களுக்குள்ள துக்கம் நீங்குவதாய் இருக்குமானால், உங்களுக்கு மன ஆறுதலைத் தருதற்கு நாங்கள் பாத்திரராய் இருப்பதை நினைந்து அளவற்ற சந்தோஷம் அடைகிறோம்; இவ்வளவு சிறந்தவர்களான உங்களுக்கு நாங்கள் இந்தச் சிறிய உதவி செய்வதைவிட வேறு என்ன பாக்கியம் இருக்கின்றது? நீங்கள் பார்சிக்காரராகவும் நாங்கள் பிராமணாளாகவும் இருந்த போதிலும் நமக்குள் ஏதொரு வித்தியாசமும் இன்றிக் கலந்து நேசமாயிருக்க வேண்டியது அவசியந்தான், என்று என் மாமனார் முகமலர்ந்து கூறினார்.

அதனைக் கேட்ட அவ்விருவரும் மன உருக்கம் மிக்கவர் களாய் விழிகளில் நீர்ததும்ப மாமனாருக்கு வந்தனங் கூறினர்.அம் மனவுருக்கந் தணியும்வரையிற் சிறிது நேரம் பேசாதிருந்தனர். அது தணிந்த சிறிதுநேரத்திற் கெல்லாம் அப்பாரசிக கனவான் என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/85&oldid=1582043" இலிருந்து மீள்விக்கப்பட்டது