உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

75

பிடுங்கி அப்பால் எறிந்துவிட்டு, இவனது தலைமயிரைப் பிடித்துச் சிம்பி முதுகைப்பிடித்து வெளியே தள்ளிச் சமையலறைக் கதவைச் சாத்தி உள்ளே தாழிட்டுக்கொண்டாள். தனைப் பார்த்துப் புன்சிரிப்பும் வருத்தமும் கொள்ளப் பெற்றேன். கையாலாகாமல் வெளியே தள்ளுண்டு தலைகுனிந்து நின்ற என்மைத்துனனைப் பார்த்து, "இனி அவர்களோடு நீ பேசுவதிற்பயனில்லை, உன் தந்தையாரைக் கவனிக்க வேண்டுவது தான் உன் கடமை. மேலும், நம் இல்லத்திற்கு விருந்தினராய் வந்த அக்கனவானும் அவர் குடும்பத்தாரும் நமக்காக மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டு தம் வீட்டிற்கும் போகாமல் இருக்கிறார்கள். அவர்கள் சொன்னபடி செய்வோம் வா” என்று சொல்லி அவனை அமைதிப்படுத்தி அழைத்தேன்; அந்தப் பட்டிகளை அடக்கத் தன்னாற் சிறிதும் ஆகாதென்று தெரிந்த பிறகு என் சொல்லுக்கு இணங்கி, அவன் இப்பால்வந்து, மெத்தைமேற் போய் மடக்குக்கட்டிலை எடுத்து வந்து விரித்து, அதன்மேல் மெல்லிய பஞ்சுமெத்தையிட்டான். ஏனென்றால் எங்கள் மாமனார் வீட்டில் வண்டியோட்டுங் குதிரைக்காரனைத் தவிர வேறு வேலைக்காரர் இல்லை.

அதன்பின் அப்பாரசிக குடும்பத்தாரும் யாங்களுமாக என் மாமனாரை மெல்லெனத் தூக்கிக் கட்டிலில் அம்மெல்லணை மேற் கிடத்தினோம். அதன்பின் அப்பாரசிககுடும்பத்தார் அமருவதற்கு நாற்காலிகள் கொண்டுவந்து கட்டிலின் பக்கத்தே இடப்பட்டன. அவர்கள் அவைகளின்மேல் அமரும்படி எங்களாற் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்.வீடெங்கும் பளிங்கு விளக்குகள் ஏற்றப் பட்டன. மணி ஏழடித்தது, மருந்துவாங்கச் சென்ற வண்டிக்காரன் கையில் மருந்து நிரப்பியபுட்டியோடும் திரும்பி வந்தான். உடனே அதனை அப்பாரசிக கனவான் வாங்கி அளவுப் படி ஒரு சிறுபளிங்கு ஏனத்தில் அம்மருந்திற் சிறிது ஊற்றி என் மாமனார் வாயைத் திறப்பித்து அதனை உட்செலுத்தினார். அப்போதும் என் மாமனார் உணர்வற்று இருந்தார். எல்லாருங் கவலையோடு அவரை உற்றுப் பார்த்தபடியே இருந்தோம். மணி ஏழரை அடித்தது.என் மாமனார் கண் இறைப்பைக்குள் கண்மணி அசைவது போற் காணப்பட்டது.யாங்கள் பின்னும் ஆவலோடு அவரைக் குனிந்து பார்த்தோம். பின்னர்ச் சிலநிமிஷங் களிலெல்லாம் அரைவாசி கண்ணைத் திறந்து பிறகு முற்றுந் திறந்தார். சென்றவுயிர் மீண்டும் வந்ததென்று களிப்புற்றோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/104&oldid=1582062" இலிருந்து மீள்விக்கப்பட்டது