உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

மறைமலையம் -14

கண்ணைத் திறந்து என்னைப் பார்த்த மாமனார் ஏதேனும் தாகத்திற்குத் தரும்படி கைக்குறி காட்டினார். முன்னமே பால்விட்டு நீர்க்கக் காய்ச்சியிருந்த வாற்கோதுமைக்கஞ்சியைக் கொண்டு வந்துயானும் என் மைத்துனனுமாக ஊட்டினோம். அதனைப் பருகியதும் சிறிதுநேரம் கண்ணைமூடிக் கொண்டிருந்த தனால், இன்னுங் களைப்புத்தீரவில்லையென்று உணர்ந்தோம். பிறகு எட்டு மணி அடித்தது. மாமனார் இப்போது நன்றாகக் கண்ணை விழித்துத் தன் மகனைப் பார்த்துத் தான் சாய்ந்து கொண்டிருக்க வேண்டுமென்று மெல்லெனச் சொன்னார். உடனே, மெல்லிய திண்டு ஒன்றை முதுகின் புறத்தே வைத்து அவரை மெதுவாகப் பிடித்துச் சாய்ந்திருக்கவைத்தான். இப்போதவர்க்கு முற்றும் நல்லுணர்வு வந்தது. ஆனாற் பேசுவது மெதுவாகவும் பிராயசையோடு கூடியதாகவும் இருந்தது. அப்பாரசிககனவானையும் அவர் மனைவியாரையும் நிரம்பத் தம்மருகே வரும்படி மிக்க வேண்டுதலோடும் சைகை பண்ணினார். அவர்கள் அங்ஙனமே மகிழ்ந்து கிட்டவர, அவ்வம்மையார் கைகளையெடுத்துத் தம் கண்களில் ஒற்றிக் காண்டும், அக்கனவான்கைகளையெடுத்துச் தம்மிருகரங்களின் இடையில் வைத்துக் கொண்டும் மெலிந்த குரலிற் சொல்லுவார், தங்கள் அன்பார்ந்த வருகையினால் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை-ஆனாலும் அம்மகிழ்ச்சியால் உண்ட இன்பத்தை என் வீட்டிலிருந்து ஆடும் இரண்டு பெண் பேய்கள் கடுத்தன. சரஸ்வதியையும் லக்ஷமியையும் போல் விளங்கா நின்ற இந்த அம்மையாரைக் குறைவாகப்பேசிய சொற்கள் என் உயிரைக் கொண்டு போகும் - எமனாகவே இருக்கின்றன. அப்பேய்கள் செய்த கொடுமையைத் தாங்கள் இருவரும் பொறுத்துக் கொள்ள வேண்டும். இனி நான் நெடுநாளைக்கு யிரோடு இரேன். அதுவரையில் நீங்கள் என்னை வந்து பார்த்து உங்கள் முகதரிசனத்தை எனக்குக் காட்டும்படி வேண்டிக் கொள்கிறேன்” என்று விட்டு விட்டுப் பிராயாசையோடு சொல்லி அவர்கள் குழந்தைகளை அருகே அழைத்து முத்தம் வைத்துக்கொண்டார்.மாமனார் பின்னே சொல்லிய சொற்களும் அவரது அன்பும் எங்கள் எல்லார் உள்ளங்களையும் நீராய் உருக்கின. அப்பாரசிக அம்மையார் முகத்தை மூடிக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதார்; அக்கனவான் கைக்குட்டையை எடுத்து அடிக்கடி தம் கண்களைத் துடைத்தார். எனக்குண்டான

66

ான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/105&oldid=1582063" இலிருந்து மீள்விக்கப்பட்டது