உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

77

என்

ஆற்றாமையால் யான் ஏதும் பேசக்கூட பேசக்கூடவில்லை, கன்னங்களின் மேல் கண்ணீர் ஓயாமல் வடிந்தது. என்மைத்துனன் பெரிதும் மனங்கலங்கி நின்றான். குழந்தைகள் எல்லாம் எங்களைப்பார்த்தபடியே கண் கலங்கி நின்றன. இந்த நிலைமையிற் கால் மணிநேரம் வரையில் நாங்கள் ஏதும் பேசாமல் நின்றோம். பின் அந்தப் பாரசிககனவான் ஒருவாறு மனத்தைத் தேற்றிக் கொண்டு மாமனாரை நோக்கிப் "பெரியப்பா, உங்க வீட்டுக்கார அம்மாவும் மகளும் எங்களெத் தாள்வாப்பேசினது எங்களிக்கிக் கொஞ்சமும் விசனமில்லெ. தயவு செய்து அதெ நீங்கோ மனசிலே வைக்கவேணாம்; உங்களிக்கி அதிசீக்கிரத்தில் சௌக்கியம் உண்டாகும். இப்போ எங்களிக்கிச் செலவு கொடுக்க. நாளெக்கி அதிகாலையில் நான் வைத்யரோட வாறேன்” என்றார். அந்த அம்மையாரும் அடிக்கடி தாம் வந்து பார்ப்பதாகவும், தமக்காகச் சிறிதும் வருத்தப்படாமல் இப்போது நடந்ததை முற்றும் மறந்து அமைதியாக இருக்கு மாறும் வேண்டிக் காண்டார். பின்னர் அந்த அம்மையார் அப்புறமாக என்னை அழைத்து அப்பெண் பிள்ளைகள் ஏது சொல்லி வைதாலும் அதற்கொன்றும் சொல்ல வேண்டாம் என்றும், மாமனாரை எந்நேரமும் கவனமாய்ப் பார்த்துக்கொள்ள வேண்டுமென்றும், தாம் நாளைப் பிற்பகலில் வருவது நிச்சயமென்றும் எதற்கும் மனசஞ்சலப்பட வேண்டாம் என்றும் சொல்லி மிகுந்த அன்போடும் என்னைப் பலகாற் கட்டிமுத்தமிட்டு எல்லாருமாய்த் தெருவாயிலுக்குப் போக யானுங்கூடவே சென்று அந்த அம்மையாரிடம் அவர்கள் விலாசத்தில் எனக்குக் கடிதம் வந்தால் அதனை என்னிடம் சேர்ப்பிக்கும்படி அவர்களைக் கேட்டுக் கொண்டேன். அதற்கு அவர்கள் அப்படியே இணங்கினார்கள். குழந்தைகளையெல்லாம் முத்தமிட்டு வண்டியிலேற்றினேன். இந்தக் கடிதத்தோடு வைத்திருக்கும் சிறுதுண்டிற் கண்ட விலாசப்படி எனக்கு உடனே கடிதம் எழுதுங்கள். மற்றவை யெல்லாம் பின்னர் எழுதுகின்றேன். வந்தனம்.

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/106&oldid=1582064" இலிருந்து மீள்விக்கப்பட்டது