உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

கடிதம் - 8

-

என் ஆருயிரிற் சிறந்த அண்ணலே,

சென்ற பத்துநாளாகத் தங்களிடமிருந்து கடிதம் வரும் வருமென்று எதிர்பார்த்தபடி வராததை எண்ணியும், தாங்கள் சிகந்தராபாக்கம் போய்விட்டீர்கள் என்ற செய்தியை இடையிற் கேட்டும், தங்களுக்கு முன்னே நான் எழுதிய ஒரு கடிதம் தங்கள் பாற் காடுக்கப்படாமல் என் வீட்டாரிடத்துக் கொடுக்கப் பட்டமையே தாங்கள் சென்னையிலிருந்து சிகந்தராபாக்கத் திற்குப் போகக் காரணம் ஆயிற்று என்பதைத் தெரிந்தும், இனித் தங்களுக்குக் கடிதம் எழுதவும் தங்கள் திருமுகத்தை யான் காணவும் நேராது போய்விடுமோ என நினைந்தும் யான் ஏங்கிய ஏக்கம் எல்லாம் இன்று வந்த தங்கள் அன்புள்ள கடிதத்தைப் பார்த்து நீங்கப் பெற்றேன். இக்கடிதத்தைக் கண்டவுடன் தங்களைக் கண்டாற் போலவே என் உள்ளங் குளிர்ந்தது; ற் அதனால் அதனைத் தாங்களாகவே பாவித்து முத்தம் வைத்தேன். என் பெருமானே, யான் இடையிற் கேட்டவை அனைத்தும் தாங்கள் இப்போது எழுதியிருக்கும் செய்திகளோடு ஒத்திருக் கின்றன. இங்கே சென்ற பத்துநாளாக நடந்தவைகளையெல்லாம் வரைகின்றேன்.

இந்தப் பத்துநாளாக யான் அடைந்த மனக்கலக்கமும் துன்பமும் இந்தப்பிறவிக்கும் இனிவரும் பிறவிக்கும் போதும். அன்பினும் அருமையினுஞ் சிறந்த என் மாமனார் நோயாய்க் கிடப்பதனால் எனக்குண்டான மனத்துயரத்திற்கோ அளவில்லை; அதனோடு இங்கு நடந்தவைகளும் தாங்கள் சென்னையை விட்டுப் போய்விட்ட செய்தியும் சேர்ந்து என்னை நீராய் உருக்கின.என் மாமனார் இன்னும் படுக்கையிலேதான் இருக்கிறார்; வந்து பார்க்கும் வைத்தியர்கள் அவர் பிழைத்து எழுந்திருப்பார் என்று உறுதியாகச் சொல்லவில்லை. அந்தப் பாரசிக கனவானும் அவர் மனைவியாரும் நாடோறும்வந்து பார்த்துப் போகிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/107&oldid=1582065" இலிருந்து மீள்விக்கப்பட்டது