உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

79

இவர்களை ஒவ்வொரு நாளுங் காணக்கிடைத்திருப்பதுதான் என் மனத்திற்குப் பெரியதோர் ஆறுதலாயிருக்கின்றது. அது நிற்க.

என் மாமனார் நோயாய்விழுந்த செய்தியை மறுநாள் என் மைத்துனனால் அறிந்த என் பெற்றோர்களும் என் தமையனும் அன்று சாய்ங்காலம் அவரைக்காண இங்கே வந்தார்கள்; அவர்களோடு என் தங்கை தனலட்சுமியும் கூடவந்தாள். என் தங்கையை இங்கே அனுப்பிவைக்கும்படி என் பெற்றோர்க்கு இதற்குமுன் இரண்டு மூன்றுமுறை எழுதியும் அவர்கள் அவளை அனுப்பாதது எனக்குப் பெருவருத்தமாயிருந்தது. ஆகவே அவள் அன்றைக்கு வந்ததைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால், என் தங்கையோ என்னிடத்தில் நிறைந்த அன்புடையவ ளாயிருந்தும், ஏதோ குற்றஞ் செய்தவளைப் போல் என்னிடம் அணுக அஞ்சினவளாய் அங்கும் இங்குமாய்ப் போய்க் காண்டிருந்தாள். இவள் இப்படி இருப்பதைப்பார்த்து எனக்கு மனம் ஒரு வகையான குழப்பமாயிருந்தது. என் பெற்றோரும் தமையனும் மாமனார் பக்கத்திற் சூழ்ந்து பேசிக்கொண் டிருக்கையில், யான் என் தங்கையைப் பிடித்து அணைத்து முத்தமிட்டுக் “குழந்தாய், நீ ஏன் என்னோடு எப்போதும் போலக் கலகலவென்று பேசாமல் விலகிப் போகிறாய்?" என்று கேட்டேன். அதற்கு அவள், "ஒன்றுமில்லை, அக்கா” என்று சொல்லித் தலையைக் குனிந்துகொண்டாள். அருமை கண்மணி, நீ உண்மையைச் சொல்லாமல் மறைக்கின்றாய். ஏதோ உன் மனத்தில் இருக்கிறது. அதை நீ சொல்லா விட்டால் மனம் எனக்கு மிகவுங் கலக்கமாய் இருக்கும்” என்றேன். “நீ மட்டும் எனக்கு உண்மையைச் சொன்னாயா?” என்று யான் திடுக்கிடும்படி மெல்லெனச் சொன்னாள். உம்மைப் பற்றிய உண்மையைத் தவிர வேறொன்றையும் யான் அவளுக்கு மறைத்த தில்லாமையால் இவள் தை எப்படியோ தெரிந்து கேட்கிறாள் என்று நாணமும் அச்சமும் அடைந்து "குழந்தாய், நான் எதனை உனக்கு மறைத்தேன்?” என்று கேட்டேன். அதற்கவள், “அம்மா அப்பா எல்லாம் அதோகிட்டேயிருக்கிறார்கள். நீ தனியாக வந்தால் சொல்லுகிறேன்” என்றாள். உடனே ஒருகாரியமாய்ப் போவது போல் அவளையும் அழைத்துக்கொண்டு மெத்தைமேல் உள்ள எனது அறைக்குட்சென்றேன். சென்று, அங்கிருந்த சார்மணைக் கட்டில் ஒன்றின்மேல் அவளும் நானும் உட்கார்ந்து “குழந்தாய் இப்போது நீ சொல்ல வேண்டுவதைச் சொல்” என்றேன்.

நீ

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/108&oldid=1582066" இலிருந்து மீள்விக்கப்பட்டது