உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

66

மறைமலையம் -14

அக்கா, இரண்டு வாரத்திற்கு முந்தி நம்ம வீட்டுத் திண்ணை மேல் உச்சிப்போதில் விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது தபால்காரன் காகிதம் ஒன்றை என்கையிற் கொடுத்து இதை வீட்டுக்குள்ளே கொடுத்துவிடு” என்று சொல்லிப் போனான். அந்தக் காகித உறைமேல் எழுதியிருந்த மேல் விலாசம் உன் கையெழுத்தாய் இருந்தது; விலாசத்தைப் படித்துப் பார்க்காமல் அப்பா அண்ணாவுக்குத்தான் நீ எழுதினையாக்கு மென்று உள்ளே ஓடி அப்பாகையில் கொடுத்தேன்” என்று அவள் சொல்லுகையில் யான் உடல் நடுங்கித் திகில் கொண்டு,

“என்ன அதை அப்பாகையிலா கொடுத்தாய்? அவர் அதனைப் பிரித்துப் படித்துப்பார்த்தாரா? சுருக்கச்சொல்” என்று கேட்டேன்.

66

"ஐயோ, நான் மேல்விலாசத்தைப் படித்துப் பார்க்காமல் அதனை அப்பாவிடம் கொடுத்து உனக்குப் பெரும்பிழை செய்து விட்டேன். அப்பா அந்தக் காகிதத்தின் மேல் விலாசத்தைப் பார்த்து இதென்னடி! நம்ம கோகிலா பக்கத்தாத்துத் தெய்வ நாயகம் பேருக்குக் காகிதம் எழுதியிருக்கிறாளே! என்று ஆச்சரியத்தோடும் கோபத்தோடும் சொல்லிக்கொண்டே காகிதத்தைப் பிரித்துப் பார்த்தார். படிக்கும்போது அவர் முகத்தில் உள்ள களை மாறிக் கோபம் உண்டானதைத் தெரிந்து ரொம்பவும் பயமடைந்தேன். உனக்கு நான் பெருந் தப்பிதம் செய்துவிட்டேன் என்று எண்ணினேன்; தெய்வநாயகத்தின் பேரைச் சொன்னாலும் என்னைக் கண்டிக்கும் நம்ம அம்மாவும் அப்பாவும் இப்போது உன்னை என்ன செய்வார்களோ என்று எண்ணி ரொம்பவும் விசனப் பட்டேன்” என்று அவள் சொல்லுகையில்,

66

'நல்லது, கண்மணி, கடந்துபோன காரியத்திற்காக நீ விசனப் பட்டுப் பயன் இல்லை. அந்தக் காகிதத்தைப் படித்தபிறகு விசனப்பட்டுப் அப்பா என்ன செய்தார்? அதைச்சொல்” என்று வினவினேன்.

66

'அவர் ஏதும் பேசாமல் சமையல்கட்டுக்குள் போய் அம்மாவண்டை குசுகுசுவென்று என்னென்னமோ சொன்னார்; அப்போது அவாள் பேசிக்கொண்டது இன்னதென்று எனக்குத் தெரியாது” என்று சொல்லியதும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/109&oldid=1582067" இலிருந்து மீள்விக்கப்பட்டது