உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

கோகிலாம்பாள் கடிதங்கள்

81

அவ்வளவுதானா உனக்குத் தெரியும்? அதன்பின் ஒன்றும் நடக்கவில்லையா? நம் அண்ணா சுப்பிரமணியனுக்கு இது தெரியுமா அவன் ஏதாவது சொன்னானா?” என்று கேட்டேன்.

66

ன்னுங்கொஞ்சம் எனக்குத் தெரியும். அன்றைக்கி ராத்திரி பத்துமணி வரையில் அவாள் ஒன்றும் பேசவில்லை. நான் சாப்பிட்டுவிட்டு எட்டுமணிக்கெல்லாம் படுத்துக் கொண்டேன். கொஞ்சநேரம் நன்னாத் தூங்கிவிட்டேன். பிறகு அம்மா அப்பா அண்ணா எல்லாரும் மெதுவாகப் பேசுகிறசத்தங் கேட்டு விழித்துக் கொண்டேன். உன்னைப்பற்றியும் தெய்வ நாயகத்தைப் பற்றியும் அவாள் பேசுவதைக் கேட்டுத் தூங்குவது போல் இருந்து உற்றுக் கேட்டேன். அப்போது அப்பா இதுக்குத்தான் பெண் பிள்ளையைப் படிக்க வைக்கக்கூடாது என்று தலையிலடித்துக் கொண்டேன் என்று சொன்னார். அதற்கு நம்ம அண்ணா பெண்பிள்ளைகளைப் படிக்க வைப்பதில் தப்பு ஒன்றும் இல்லை; பெண்களைப் பெற்றவர்கள் செய்யும் ஏற்பாட்டிலேதான் தப்பு உண்டு' என்று சொன்னான். அப்படி யானால் நாம் என்னதப்பான ஏற்பாடு செய்து விட்டோம்?” என்று அப்பா கேட்டார். நம் கோகிலா பால்குடித்த பல்கூட விழாத ஏழுவயதுக் குழந்தையாய் இருக்கையில் அவளை நாற்பத்தைந்து வயதுள்ள நோயாளிக்கு மூன்றாந் தாரமாகக் கட்டிக்கொடுத்தியே; அந்த ஏற்பாடுதான் பிசகு என்று அண்ணா சொன்னான். 'போடா போ, இதெல்லாம் நம்ம செயலா? அல்லது நீயாவது மாதம் ஒன்றுக்கு முந்நூறு நானூறு சம்பாதிக்கிறியா? இங்கிலிஷிலே பி.ஏ. பரிட்சை தேறினே; தமிழிலே படிபடி என்று படிச்சுக்கிழிச்சே, மாசமெல்லாம் உத்தியோகஞ் செய்து இருவது ரூபா கொண்டு வருகிறே. கோகிலாவைக்கட்ட நாலாயிர ரூபா தொகுப்பாக் கொடுத்தார்கள். அந்தப் பணத்தைக் கொண்டுதான் உன்னைப் படிக்க வைத்தேன். இப்போ நீ என்ன கொழிக்கிறே' என்று அப்பா ஆத்திரத்தோடு பேசினார்.

66

அதற்கு நம்ம அண்ணா ‘உனக்குப் பணம் பணம் என்று பணந்தான் பெரிதாய் இருக்கிறது. கோகிலாவைக் கொலை செய்வது போல் விற்று நீ வாங்கின நாலாயிரரூபாவும் நிலையாய் நின்றதா? நீயே பலவகையில் அப்பணத்தை வீண்செலவு செய்து விட்டது எனக்குத் தெரியாதா? யான் பச்சையப்பன் பள்ளிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/110&oldid=1582068" இலிருந்து மீள்விக்கப்பட்டது