உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L

82

மறைமலையம் -14

கூடத்தில் தருமச் சம்பளத்தில் படித்துப் பி.ஏ. பரீட்சையில் தேறியிருக்க, நீ எதோ எனக்கு அதைச் செலவு செய்துவிட்டதாகப் பொய் பெருமை பாராட்டுகிறாயே; நான் அறிவுக்காகப் படித்தேனேயல்லாமல் பணத்திற்காகப் படிக்கவில்லை. என் படிப்பின் அளவுக்குத் தக்கபடி பணம் தானாகவே மேன்மேல் மிகுதியாக வரும். செட்டாய்ச் செலவு செய்தால் எனது சம்பளமும் நமது பிதிரார்ச்சித வரும்படியும் நம் குடும்பத்திற்கும் இன்னுமொரு குடும்பத்திற்கும் நன்றாய்ப்போதும். உன்னைப் போல் வீண்செலவு செய்தால் இதுவும் போதாது.இதைப்போல் இன்னும் பத்துமடங்கு வந்தாலும் போதாது. அதனாலேதான் நீ பணமோ பணமோ என்று அலைகிறாய். அதெல்லாம் இருக்கட்டும். நம் கோகிலாவை நீயே காசுக்காக விற்றுவிட்டு, ப்போது அப்படி நடந்ததெல்லாம் விதியென்கின்றாய். அதெல்லாம் விதியானால் இப்போது அவளும் பக்கத்து ஆம்பள தெய்வ நாயகமும் அன்பு பாராட்டி வருவதும் விதியென்று இருக்கிறது தானே; அதைவிட்டு அவர்கள் இருவரையும் கருவறுக்கிறேன் என்று நீ கறுவம் கட்டுகிறது ஏதுக்கு, என்றான். அவன் சொற்களைக் கேட்ட அப்பா ரொம்பவும் கோபம் அடைந்து கையைத் தரைமேல் அடித்துப் பயலே, தகப்பன் மகன் என்கிற மட்டு மரியாதைகூட இல்லாமல் நான் சொல்லுகிறதை மறுத்துப் பேசுறாயா? உன் எழவுக்குப் பட்டபாடெல்லாம் விழலுக் கிறைத்த நீராயிற்றே இங்கிலீஸ் படித்த கொழுப்பா உன்னை இவ்வளவு தூரம் பேசச் சொல்றது.கோகிலாவை நீயே அவனுக்குக் கூட்டிக் கொடுப்பாய்போல் இருக்கிறதே' என்று சொல்லிக் காறித்துப்பினார். நம்ம அண்ணாவோ அப்பா கோபத்தைப் பார்த்துப் பயப்படாமல் சாந்தமாகவே, வீணாய்க் கோபிக்கிறாய்? நான் ஒன்றும் அவமரியாதையாகப் பேசிவிட வில்லை. நான் இங்கிலீஷ் படித்ததனாலேதான் நியாயமாகப் பேசுகிறேன். நீயோ நியாயமின்றிக் கோபம் அடைகிறாய். நியாயம் பேசுகிறபோது அப்பன் மகன் என்கிற உறவில்லை; உண்மை எதுவோ அதைத்தான் சொல்லவேண்டும்; கோகிலாவுக்காக நான் பரிந்து உண்மையைச்சொல்ல, நீ கூட்டிக்கொடுப்பாய்போலி விருக்கிறதே என்று தகாத வார்த்தையைச் சொன்னாய். நீ செய்ததைப் போலவும் நம்மவர் களிற் சிலர் செய்வதைப் போலவும் அப்படியொன்றும் நான் செய்யத் துணியேன். குழந்தைப்பருவம் முதற்கொண்டே

ஏன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/111&oldid=1582069" இலிருந்து மீள்விக்கப்பட்டது