உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க

கோகிலாம்பாள் கடிதங்கள்

ம்

83

கோகிலாவும் தெய்வநாயகமும் மிகவும் நெருங்கிப் பழகினவர்கள்; பத்து வயது வரையில் ஒரே பள்ளிக்கூடத்திற் படித்தவர்கள் கோகிலா பருவம் ஆகும் வரையில் அவனும் அவளும் மிகவும் நேசமாயிருக்கும்படி விட்டு விட்டோம். அவர்கள் இருவரும் அழகிலும் குணத்திலும் கல்வியிலும் ஏறக்குறைய ஒத்தவர் களாயிருத்தலால் அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் மிகுந்த அன்பு பாராட்டலானது சகஜந்தானே. அவளுக்குத் தக்க கணவன் வாய்ந்திருந்தாலும், அல்லது ஏறக்குறைய உன் வயதுள்ள அவள் கணவன் உயிரோடிருந்தாலும் அவள் தெய்வ நாயகத்தைப் பற்றி நினைக்க இடமிருந்திராது என்று சொல்லலாம். கணவன் முகத்தைக் கூடப் பாராமல் ஐயோ எட்டு வயதிலேயே தாலியறுத்த டு கோகிலா தன்னால் மிகுந்த அன்போடு நேசிக்கப்பட்ட தெய்வ நாயகத்தினிடம் மேலும் மேலும் அன்புடையள் ஆனது குற்றமாகப் பழிக்கத் தகுந்ததா!” என்று சொன்னான். அது வரையில் பேசாமல் இருந்த நம்ம அம்மா அண்ணா சுப்பிர மணியனைப் பார்த்து, ‘ஆமா, நீ சொல்றது சரிதான். நாமளோ பார்ப்பாரச் சாதி, அடுத்த ஆத்துத் தெய்வநாயகமோ சூத்திரச் சாதி, இதையாவது நினைக்க வேணாமா? மேலும் தான் விதந்துவாயிருப்பதையேனும் நினைத்துப் பார்க்க வேணாமா? கோகிலா என்ன சிறுகுழந்தையா, புத்தியறிந்தவளாச்சே, நல்ல படிப்பாளியாச்சே நம்ம குடும்பத்திற்கு எவ்வளவு அவமானம். இதையெல்லாம் நினைத்துப் பார்க்காமல், தான் சுகமாயிருக் கிறதைத்தானே நினைத்தாள்!' என்று சொன்னாள். அதற்கு நம்ம அண்ணா ‘அம்மா, நீ கூடத் தெரியாமல் பேசுகிறாய். நான் நம் கோகிலாமேல் எள்ளளவு கூடக் குற்றம் சொல்ல மாட்டேன். சமவயசும் அழகும் சமமான நற்குணமும் இளமையும் கல்வியும் வாய்ந்த ஸ்திரீ புருஷாள் ஒருவரையொருவர் காணும்படி நேருமானால் கண்ட கண்ட அந்த க்ஷணமே அவர்கள் தம்மை அறியாமல் தமக்குள் ஒரு தெய்வீகமான அன்பு உண்டாகப் பெறுவார்கள்; அந்த அன்பு பிறகு எந்தக் காரணத்தை யுள்ளிட்டும் எக்காலத்தும் மாறவே மாட்டாது; அவர்கள் இருவர் உயிரும் ஓர் உயிராய்ப் போகும். அப்படிப்பட்ட உயர்ந்த அன்புக்குமுன் சாதிக் கட்டுப்பாடு சமயக் கட்டுப்பாடு குடும்பக் கட்டுப்பாடு முதலான எவையும் எதிர் நிற்கமாட்டா. அப்படிப் பட்ட உயர்ந்த அன்பின் வசப்பட்டவர் களைச் சுயகாரியம் பார்ப்பவர்களென்று சொல்லவே கூடாது.பெற்றோர் சுற்றத்தார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/112&oldid=1582070" இலிருந்து மீள்விக்கப்பட்டது