உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

மறைமலையம் -14

கட்டி வைக்குங் கட்டுப்பாட்டுக்கு அடங்கித் தன் கணவன்மேல் பிரியம் வைக்கும் சாதாரண ஸ்திரீகளின் நடவடிக்கைக்கு நம் கோகிலாவைப் பலிகொடுத்து விடக்கூடாது. அவளுடைய சேஷத்தை நான் நன்றாய் அறிவேன். மழை பெய்தால் நீர் நிறைந்து வற்றிப்போகும் ஊறாக் கிணற்றுக்கும் பல வருஷங் களாக மழை பெய்யாவிட்டாலும் இறைக்க இறைக்க ஊறும் கிணற்றிற்கும் எவ்வளவு வித்தியாசம் உண்டோ அவ்வளவு வித்தியாசம் பிறர் கட்டுப்பாட்டுக்காகப் பிரியம் வைக்கும் சாதாரண ஸ்திரீகளுக்கும் அப்படியின்றி இயல்பிலேயே அன்புருவாய் விளங்கும் நம் கோகிலாவுக்கும் உண்டு. அம்மா, நான் தமிழ் இங்கிலீஷில் அநேக சரித்திரங்கள் படித்திருக்கறேன்; அச் சரித்திரங்களில் உயர்ந்த அன்புடைய ஸ்திரீ புருஷர்களின் வாழ்க்கையின் வரலாறுகளைப் படித்தறிந்திருக்கிறேன். இப்போது நம் கோகிலாவும் தெய்வநாயகமும் நேசம்பூண்டிருப்பது அவற்றை ஒத்ததாகவேயிருக்கிறது. அவள் தனது சுகத்தைக் கருதி இப்படிச் செய்தாள் என்று நினையாதே. நம்மவர்கள் செய்து வைத்திருக்கும் சாதிக்கட்டுப்பாடு சமயக் கட்டுப்பாடு குடும்பக் கட்டுப்பாடு முதலியவற்றையெல்லாம் நன்றாக ஆழமாய்ச் சிந்தித்துப் பார்த்தால் எல்லாம் சுயகாரியமாகத்தான் முடியும். அப்படியிருக்கக் கோகிலா மேல் குற்றஞ் சொல்வது நியாயமாக இல்லை என்று வெகு உற்சாகத்தோடு பேசினான். அவைகளுக் கெல்லாம் நம்ம அம்மா ஒன்றும் சொல்லத் தெரியாதவளாய் உன்னைப்போல நான் என்ன படிச்சா இருக்கிறேன்? நம்ம கோகிலா இப்போது செய்வது நியாயமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அடுத்த ஆத்துப் பையன் இந்த ஊரிலே இல்லாமல் வேறே தூரமான எந்த ஊருக்காவது போகும்படி வழிசெய்தால், அப்போதுதான் நம்ம கோகிலா அடங்குவாள்' என்று சொன்னாள். அதற்கு நம்ம அண்ணா ‘அவன் எவ்வளவு தூரம் போனாலும், அவர்கள் இருவருக்கும் உள்ள அன்பை மாற்ற எவராலும் முடியாதென்று நினைக்கிறேன்' என்று சொன்னான். அப்போது நம்ம அப்பா இவன் ரொம்பப்படித்த அகங்காரத்தால் இன்னதுதான் பேசுறதென்னு தெரியாமல் பினத்துறான்.நல்லது, நாளைக்கு அந்த முதலிப்பயல் இந்த ஊரில் இல்லாமல் செய்கிறேன்' என்று சொல்லிக்கொண்டே எழுந்து மெத்தைமேல் படுக்கப்போனார். அப்பால் அண்ணாவும் ‘நீங்கள் எப்படியாவது போங்கள்' என்று சொல்லிவிட்டுப் படுக்கைக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/113&oldid=1582071" இலிருந்து மீள்விக்கப்பட்டது