உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

❖LDMMLDMOLD-14 → மறைமலையம்

நீயும் உன் கணவனும் பாதுகாவலோடு வைத்து ஏதுங்கவலை யின்றி இல்லறத்தை நடத்தி இன்பம் அனுபவிப்பீர்களாக! ஏழை எளியவர் களுக்கும் வலியற்றவர்களுக்கம் இயன்ற அளவு ஊணும் உடையும் கொடுத்து அவர்கள் துன்பத்தைப் போக்குவீர்களாக! பசியாலுந் தாகத்தாலும் வருந்திவந்தவர்களுக்கு முதலில் உணவுந் தண்ணீருங் கொடுத்து அவர்கள் களைப்பை மாற்றியபின் நீங்கள் உண வடுக்க வேண்டும். தமிழ்க்கல்வியை எவரும் படிக்கும்படி சய்து வருதல் வேண்டும்; படிக்க வகையற்றவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்துவாருங்கள். நீங்களும் டைவிடாது கல்வியிற் பயின்று வருதல் வேண்டும்.உன்கணவன் இங்கிலீஷிலும் வல்லவனாதலால், அந்தப் பாஷையிலிருக்கின்ற அற்புதமான பூதபௌதிக சாஸ்திரக்கருத்துக்களையெல்லாம் நீ தெரிந்து கொண்டு தமிழர்களுக்குப் பயன்படும் வண்ணம் அவற்றை எழுதித் தமிழ் நூல்களாக வெளிப்படுத்தல் வேண்டும்” தமிழோ மிகவும் பழமையான பாஷை; மிகவுந் திருத்தம் உள்ளது, அழகுவாய்ந்தது, வழக்கத்திலிருப்பது; நமது சமஸ்கிருதபாஷை பழமையான தென்றாலும் அஃது உலகவழக்கத்தில் இல்லாதது; பேசுவதற்கும் படிப்பதற்கும் தமிழைப்போல் இனிமையாகவும் மிருதுவாகவும் இல்லாதது; அதனை எவ்வளவுதான் கற்றாலும் அதனால் எல்லாரோடும் பேசமுடியாது; அதில் நூல்கள் எழுதினால் அவற்றை எல்லாரும் படித்துப் பயன் அடையப் போகிறதில்லை. ஆதலால், அந்தப்பாஷையில் நம்மவர் வைத்திருக்கின்ற துரபிமானத்திற்கு நீ ஆளாகப்படாது. தமிழையே பரவச் செய்தல் வேண்டும். சமஸ்கிருத பாஷைச் சொற்களைக் கண்ட மட்டும் தமிழில் வழங்காமல் தமிழ்ச் சாற்கள் ஏராளமாக இருப்பதால் அவற்றையே நீ பழக்கத்துக்குக் காண்டுவந்து, புண்ணிய பூமியாகிய இத்த தமிழ் நாட்டுக்குப் பலநன்மைகளை நீ செய்தல் வேண்டும். தெய்வ பக்தியினை வளரச் செய்யுந் தேவார திருவாசகங்களும் மற்றவைகளுங் கற்று நீங்களிருவரும் சூரிய சந்திரர்களைப் போல நீடூழி வாழ்ந்து வருவீர்களாக' என்று சொல்லியதும் தொடர்பாகப் பேசி வந்ததனால் களைப்படைந்தவராகி என் மாமனார் சிறிதுநேரம் கண்ணை மூடிக்கொண்டிருந்தார்.

யானோ இவர் பேசிய சொற்களால் மெய்மறந்த மகிழ்ச்சி உடையவளாகி இன்னது செய்வதென்று தெரியாமல் யானும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/121&oldid=1582079" இலிருந்து மீள்விக்கப்பட்டது