உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

  • கோகிலாம்பாள் கடிதங்கள்

91

"ஓ! கோகிலா, நீ அப்படிச்சொல்லாதே, கற்பொழுக்கத்திற் சிறந்த உனக்கு அப்படி ஒன்றும் சிறுமைநேராது. நீ சொல்லிய விருத்தாந்தங்களையெல்லாம் நன்றாக எண்ணிப்பார்த்தால் உனக்கும் அந்தப்பையனுக்கும் உண்டாயிருக்கும் நேசமானது மகா பரிசுத்தமும் தெய்வத்தன்மையும் உடை தெய்வத்தன்மையும் உடையதாக இருக்கிறது. நீயே அவனுக்கு மணமகளாகவும் அவனே உனக்கு மணமக னாகவும் பொருந்தத்தக்கவர்கள். ஏதோ ஊழ்வினைப்பயத்தால் உங்கள் இருவரையும் வெவ்வேறு சாதிகளிற் பிறப்பித்து இது வரையில் உங்களை வருத்திய தெய்வமானது இனி உங்களை ஒன்று கூட்டு மென்று நம்புகின்றேன். ஆனால், ஒன்று சொல்லுகிறேன். நீ எப்படியாவது அவனோடு விவாகஞ்செய்து கொண்டுதான் வாழ வேண்டும்” என்றார்.

மாமனார் சொல்லிய இவ்வமிர்த மொழிகளால் உயிர் தளிர்க்கப் பெற்றயான் அவர் கடைசியிற் சொல்லிய சொற்களைக் கேட்டுச் சிறிது திடுக்கிட்டு “மாமா, நீங்கள் சொல்லுகிறபடிநான் அவரை மணந்து கொள்வதற்கே விருப்பம் உடையேனாயினும், நாங்கள் இருவரும் வெவ்வேறு சாதியினராகவும், எனது நிலைமை ஒரு விதந்துவின் இயல்புடையதாகவும் இருத்தலால், நாங்கள் வாகம் செய்து கொள்வதற்கு இந்த நாட்டிலுள்ளவர்கள் எவரும் சையமாட்டார்களே! அதுமட்டுமா! எங்களைப் பலவகையிற் புறம்பழித்து எங்களுக்குப் பலவாறு தீங்கிழைப் பார்களே” என்று கலக்கத்தோடு கூறினேன்.

66

ல்லை! இல்லை! கோகிலா, என்னுடைய கருத்து அப்படியன்று; இந்தத் தேசத்தவர் தன்மை எனக்குத் தெரியாதா! இதைப்பற்றி உன் தமையனிடம் பேசியிருக்கின்றேன். அவனும் என் ஏற்பாட்டிற்கு இணங்கியிருக்கின்றான். நம்மிடம் வருகிற அன்பர்களான அப்பாரசிகப்பெருமானிடத்தும் பெருமாட்டி யிடத்தும் உன்னை அடைக்கலமாக ஒப்பிக்கப்போகிறேன். அவர்கள் பம்பாய்க்கு உன்னையும் அந்தப்பையன் தெய்வநாயகத் தையும் அழைத்துப்போய் விவாகம் செய்விப்பார்கள். உன் தமையன் அப்போது உன்னுடனிருந்து எல்லா உதவியும்செய்து, உங்கள் விவாகத்தை நடத்திவைப்பான். எனக்கு ஓர் இலட்சம் ரூபா இருக்கிறது. அத்தொகையில் எண்பதினாயிரரூபா எடுத்து நாற்பதினாயிரரூபா உனக்கும் நாற்பதினாயிரரூபா உன் தமையனுக்குமா எழுதிவைக்கப் போகின்றேன். இத்தொகையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/120&oldid=1582078" இலிருந்து மீள்விக்கப்பட்டது