உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

மறைமலையம் -14

உன்னிடத்தில் அவ்வளவு பிரியமாய் இருந்தானா?" என்று

வினாவினார்.

66

“ஆம், மாமா, அவரும் ஒரு நிமிஷமேனும் என்னைப் பாராமலிருப்பதில்லை. அடிக்கடி எங்கள் வீட்டுக்கு ஓடிவருவர். அப்போது அம்மா ஏதேனும் அவருக்குப் பட்சணங் கொடுப்பள். அதைத் தான் வாங்காமல் 'முதலில் கோகுக்குக்கொடு, இல்லாக் கால் நான் வாங்கமாட்டேன்' என்று பிடிவாதஞ்செய்வர். அதன்மேல் அம்மா எனக்குப்பாதியும் அவருக்குப்பாதியும் கொடுப்பள். குடகுக்கிச்சலி, சீமை இலந்தைப்பழம் முதலியன அவர் வீட்டார் அவருக்குக் கொடுத்தால் அவர் அவற்றை எடுத்துக் கொண்டு வந்து என் கையிற் கொடுத்து என்னைத் தின்னச் சொல்லிக் கட்டாய படுத்துவர்; யானோ நீ தான் முதலில் தின்ன வேண்டும் என்பேன். அவர் ‘நீ தான் தின்ன வேண்டும்’ என்பார்.நான் தின்னாமல் இங்ஙனம் மறுத்துக் கொண்டிருந்தால் அவர் கண்கலங்கும். அது கண்டு எனக்கும் அழுகைவரும். பிறகு இருவருமாய் அவற்றைப் பகிர்ந்துகொண்டு ஒரே சமயத்தில் தின்னுவோம். அறியாப் பருவத்தில் எம்மிருவருக்கும் உண்டான இந்த நேசமானது வரவர வளர்ந்து வந்ததேயல்லாமல் சிறிதுங் குறைந்ததில்லை” என்று கூறினேன்.

“நல்லது, கோகிலா, அந்தப்பையன் வேறொரு பெண்ணை விவாகம் செய்து கொண்டால் நீ யாது செய்வாய்? அல்லது அவன் பெற்றோர்கள் கட்டாயப்படுத்தி ஒரு பெண்ணை அவன் கழுத்தில் கட்டிவிட்டார்களானால் நீ என்செய்வாய்?” என்று நீ சிறிது இரக்கத்தோடு என் மாமனார் கேட்டார்.

66

'மாமா, என்னைத் தவிர அவர் வேறொரு பெண்ணைக் கனவிலும் நினைப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை. அவருடைய பெற்றோர்கள் அவருக்கு விவாகஞ்செய்ய எவ்வளவோ முயன்று பார்த்தும் அவர் அதற்குச் சிறிதும், இணங்கவில்லை. ஒருகால் தெய்வசங்கற்பத்தால் அவர் வேறொருத்தியை மணந்து கொள்ளும்படி நேர்ந்தாலும், யான் அவர்மேல் வைத்திருக்கும் அன்பை மாற்றிக்கொள்ளச் சிறிதும் வல்லவள் அல்லேன்; என்வாழ்நாட்கழியும்மட்டும் யான் அவர் காலடியிற் கிடந்து அவருக்கு ஊழியஞ் செய்துகொண்டு அவருக்கு வேலைக்காரியாய் இருப்பேன்' என்று யான் சொல்லுகையில் என் மாமனார் நான் கடைசியிற் சொன்னதைக் கேட்டு மனம் உருகினவராய்,

""

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/119&oldid=1582077" இலிருந்து மீள்விக்கப்பட்டது