உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

89

களெல்லாம் நன்றாய்த் தூங்குகிறார்களாவென்று பார்த்துவா” என மிகுந்த மனக்கிளர்ச்சியோடு சொல்ல, யான் வியப்புற்று, அவர் சொல்லிய வாறே பார்த்துவந்து “எல்லாரும் தம்மைமறந்து தூங்குகிறார்கள்" என்றேன். “அதன்மேல் அவர் என்னைத் தமக்குப் பக்கத்திலே இருக்கும்படி கற்பித்துத் தாம் தலயணைமேற் சாய்ந்த வண்ணமாய் அமர்ந்து, "குழந்தாய், நீ உங்கள் பக்கத்து ஆத்துத் தெய்வ நாயகத்திற்குக் கடிதம் எழுதினையாமே?” என்று அமைதியோடும் வினாவினார். யான் எதிர்பாராத தொன்றை இவர் கேட்டமையால் மிகக் கலங்கி இன்னது சொல்வதென்று அறியாமல் திகைத்து ஒன்றுஞ்சொல்லாமல் பேசாதிருந்தேன். அதனைக் கண்டு பின்னும் அவர் “நீ கொஞ்சமும் பயப்பட வேண்டாம்; உண்மையைச் சொல்” என்று குளிர்ந்த முகத்தோடு கேட்டார். அவர் முகத்தில் கோபம் வருத்தம் முதலியகுறிகள் காணப் படாமையால் சிறிது மனந்தேறி, “மாமா, ஆம். நான் அவருக்குக் கடிதம் எழுதினது உண்மைதான்” என்று சிறிது தடுமாற்றத்தோடு சொன்னேன்.

“நாமோ பிராமணாள், அந்தப் பையனோ சூத்திரச்சாதி, இன்னும் நீயோ கைம்பெண், நீ அவனோடு ஸ்நேகம் பண்ணுவது தெரிந்தால் பிராமணாள் சூத்திராள் எல்லாரும் அவமதிப்பாய்ப் பேசுவார்களே. மற்றவர்கள் இருக்கட்டும். கல்வியும் விவேகமும் வாய்ந்த உனக்கு இது குற்றமென்று தோன்றவில்லையா?” என்று கேட்டார். இவர் இப்போது சொல்லிய சொல் ஒவ்வொன்றுங் கூரிய அம்புபோற்பாய்ந்து என் நெஞ்சைத் துளைத்து விட்டன. இவற்றிற்கு விடைசொல்லவேண்டுமென்று ஏதோ என்னைத் தூண்டுவதுபோற் காணப்பட்டது.உடனே யான்,

66

'மாமா, நான் செய்வது குற்றமோ குற்றமில்லதோ, இதனைப் பகுத்தறியச் சத்தியற்றவளாயிருக்கிறேன். தெய்வ நாயகமும் நானும் சிறுபருவம் முதலே உடன் வளர்ந்து உடன் பழகி ஒரே பள்ளிக் கூடத்தில் சிலவருஷங்கள் வரையில் படித்துவந்தோம். அக்காலத்திலேயே அவரைக் காணாமலும் அவரோடு பேசாமலும் இருக்க என்னால் முடிவதில்லை; அவரைப் பிரிந்திருந்த சமயங்களிலெல்லாம் என்உயிர் தத்தளிப்ப துண்டு”என்று நான் சொல்லு கையில், என் மாமனார்.

66

நடுவே ஒன்று கேட்கிறேன்; நல்லது, நீ அவனிடத்தில் அவ்வளவு பிரியமாயிருந்தது போல, அப்போது அவனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/118&oldid=1582076" இலிருந்து மீள்விக்கப்பட்டது