உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

மறைமலையம் -14

பேசக்கூடவில்லை. மாமனாரிடம் திரும்பி வந்து சிறிதுநேரம் பேசாமலிருந்தோம் அப்பால் என் பெற்றோர்கள் தம் இல்லத்திற்குச் செல்ல விடைதரவேண்டுமென்று மாமனாரைக் கேட்டார்கள். அவரும் அதற்கு இசையவே எல்லாரும் அங்கு நின்றும் புறப்பட்டார்கள். என் மாமனார் என் தமயனுக்குச் சைகைசெய்து அவனை மட்டும் சிறிது பின்னிட்டுப் போகும்படி குறிப்பித்தார். அங்ஙனமே அவன் பெற்றோர்களை முன்விட்டுப் பின்னே நின்றான்; நான் என்பெற்றோர்களோடு பேசிக் என் தங் தங்கையைக் கையிலிட்டுக்கொண்டு

காண்

தருவாசலுக்கு போனேன். ஆகையால், மாமனாருக்கும் என்தமயனுக்கும் இடையில் நடந்தது இன்னதென்று எனக்குத் தெரியாது. ஆனால், என் தமயன் மட்டும் சென்ற வாரத்தில் இரண்டுமுறை பிற்பகலில் தனியேவந்து என் மாமனாரிடம் தனியாகப் பேசிப்போனான். இஃது இப்படியிருக்க, நேற்றிரவு நடந்தவைகளைச் சிறிது வரைகின்றேன்.

6

என் மாமனார் என்னைத்தவிரப் பிறர்கையில் கஞ்சி வாங்கிக் குடிப்பதுமில்லை; எது வேண்டுமானாலும் என் மைத்துனனை ஏவுவர். மாமியும் நாத்துணாரும் அவர்கிட்ட வருவதுமில்லை, வந்தாலும் அவர் வெறுப்புடன் பார்க்கும் பார்வைக்குப் பயந்து அப்பால் விலகிப்போய்விடுவர். இவ்வளவு கெட்ட முரடர்களான அப்பெண்பாலார் இருவரும் வயது முதிர்ந்த என் மாமனாருக்கு நிரம்பவும் பயந்து நடுங்குவதை நினைத்து யான் ஒவ்வொரு கால் வியப்படைவதுண்டு; ஆனாலும், அதன்காரணம் மட்டும் எனக்கு விளங்குவதில்லை. ந்த வரலாறுகளால், இரவில் நான் மட்டும் தான் என் மாமனார் படுக்கையண்டை உறங்குவது வழக்கம்; என் மைத்துனனோ அறைக்கு வெளியே தாழ்வாரத்தில் உறங்குவன். நேற்று நடுஇரவில் பன்னிரண்டரை மணியிருக்கும். நானோ நன்றாய் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தேன். ஏதோ மெல்லிய ஓசை எங்கிருந்தோ வருவதுபோல் தூக்கத்தில் எனக்குத் தோன்றியது. உடனே விழித்துப்பார்த்தேன்; என் மாமனார்தாம் “குழந்தே, குழந்தே” என்று என்னை எப்போதுங் கூப்பிடுகிற வழக்கப்படி மெல்லக் கூப்பிட்டார். “ஏன் மாமா" என்று சொல்லிக் கொண்டே அவர் அருகில் போனேன். அவர், “கையில் விளக் கெடுத்துக் கொண்டு அரவமில்லாமற்போய் வீட்டிலுள்ளவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/117&oldid=1582075" இலிருந்து மீள்விக்கப்பட்டது