உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

87

தனது இருக்கையினின்றும் எழுந்து அவ்வம்மையார்க்கும் அவர்தம் கணவர்க்கும் வணக்கவுரை கூறினான்.

ச்சமயத்தில் மறுபடியும் தலைவாயிலண்டை ஒரு வண்டி வந்து நின்றது. ஒரு நிமிஷத்திற்கெல்லாம் வெள்ளைக்கார வைத்தியர் உள்ளே வந்தார். அப்பாரசிககனவான் தன் இருக்கையினின்றும் எழுந்து வந்தனம் சொல்லி அவரை அதில் இருக்கவைத்துத் தான் பிறிதொன்றின்மேல் இருந்தார். இப்போது வைத்தியரும் அப்பாரசிககனவானும் என் மாமனாரும் தமயனு மெல்லாம் ஆங்கில மொழியிற் பேசிக்கொண்டார்கள். பிறகு வைத்தியர் மாமனாரின் நாடியையும் சுவாசப் பையின் அசைவையும் நாவையும் கண்ணையும் பரிசோதித்துப் பார்த்தார். அதன்பின் தமது சட்டைப்பையிலிருந்து ஒருசிறு புட்டியை எடுத்து அதிலிருந்த மருந்தை முனையிற் கூர்மையாயிருந்த ஒரு சிறிது நீண்ட குழையில் ஊற்றி, அக்கருவியின் முனையால் இடது தோட்புறத்திற்குத்தி நரம்பின்வழியே அம்மருந்தை ஏற்றினார். அதன்பின் மறுநாட் காலை வரையிற் செய்யவேண்டிய முறைகளை சொல்லிவிட்டுப் போனார். பின்னர் சிறிது நேரம் பேசியிருந்த பின் அப்பாரசிக கனவானும் அவர் மனைவியாரும் எல்லாரிடத்தும் விடை பெற்று கொண்டு தமது இல்லத்திற்குப் புறப்பட்டார்கள். என் தமையனும் மைத்துனனும் அவர்களை வழிவிடுதற்குத் தலைவாயில் வரையிற் போனார்கள்; நானும் அவ்வம்மையாரைப் பிரிதற்குக்கூடாமல் அவர்களுடன் தலைவாயிலண்டை சென்றேன். அவர்களை வண்டியிலேற்றி அனுப்பியபின்னர், என் தமயனை நோக்கி “வைத்தியர், மாமா நோயைப் பற்றி யாது சொல்லினார்?” என்று கேட்டேன். அவன், "மாமாவின் இருதயம் மிகவும் நிலைகுலைந் திருப்பதாயும், அதனால் அவர் உடம்பிலுள்ள இரத்தம் முற்றும் நஞ்சாய்ப் போய்விட்டதாயும், அவர் பிழைப்பது மிகவும் அரிதென்று தமக்குத் தோற்றுவதாயும், மிக உயர்ந்த மருந்துகள் உட்செலுத்தப் பட்டாலும் முதிர்ந்த வயதினரா யிருத்தலால் அவற்றால் முற்றும் நோய்தீருமென்று திட்டமாய்ச் சொல்லமுடியா திருப்பதாயும், என்றாலும் விரைவில் மரணம் நேரவொட்டாமல் அம்மருந்துகள் அவரை இன்னுஞ் சிலநாட்கள் பிழைத்திருக்கச் செய்யுமென்று தமக்கு நம்பிக்கை இருப்பதாயும் கூறினார்” என்று தெரிவித்தான். இச்செய்தியைக் கேட்டு என் நெஞ்சம் நிலை தடுமாறிக் கலங்கியது. வேறொன்றும் அப்போது யான் என் தமயனோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/116&oldid=1582074" இலிருந்து மீள்விக்கப்பட்டது