உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

❖LDMMLDMOLD-14 →

டு

அப்பாரசிக அன்னையார் மிகுந்த ஆராமையோடும் என்னை அணைத்துக் கொண்டார்கள். அக்கனவானோ "பெரியய்யா எப்படியிருக்குறாங்கோ அம்மா?” என்று ஆவலோடு வினவினார். “கொஞ்சம் சுகந்தான்” என்று சொல்லிக்கொண்டே அவர்களை அழைத்துக்கொண்டு மாமனார் படுக்கையறைக்கு வந்தேன். இப்போது இவர்களுடன் இவர்களின் பிள்ளைகள் வரவில்லை. இவர்களைக் கண்டவுடன் என் மாமனார் முகம் மலர்ந்து காட்டியது.என் மைத்துனன் இவர்களைக் கண்டவுடன் எழுந்து வந்தனம் பண்ணி இரண்டு நாற்காலி கொண்டு வந்து மாமனார் கட்டிலின் அருகில் இட்டு அவர்களை அவற்றின்மேல் இருக்கும் படிவேண்டினான். மாமனாரும் மிகவும் அன்போடு அவர்களை அவற்றில் இருக்கச்சொன்னார். அவர்கள் அமர்ந்தவுடன் மாமனாரைப் பார்த்து அவரது சுகநிலை எப்படியென்று கேட்டார்கள். மாமியும் நாத்துணாரும் இவர்களைப் பார்த்தவுடனே முகத்தைத் திருப்பிக் கொண்டு பின் கட்டுக்குப் போய்விட்டார்கள். என் அன்னை அவர்களோடு செல்லவில்லை. இவர்களைப் பார்த்து வியந்தபடியே நின்றாள். என் தந்தையும் தமயனும் கட்டிலின் அப்பக்கத்தே நாற்காலியிலிருந்தபடியே இவர்களை இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்பாரசிக கனவான் மாமனார் சுகத்தைப் பற்றிக் கேட்டானதும், எதிரிலிருந்த என் தமயனைப் பார்த்து "இவங்கோ நம்ம கோகிலாம்மா அண்ணாத்தெ எண்ணு நினைக்கிறேன்” என்று மகிழ்ந்த முகத்தோடு கேட்டார்; அச்சமயத்தில் அவர் மனைவியர் என்னையும் என் தமயனையும் பார்த்து மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்தார்கள். என் மாமனார் "ஆம் ஐயா, குழந்தை கோகிலாவுக்கு-இவன் ஒருவன் தான்-தமயன் என்னு-சொல்லத் விவேகத்திலும் நற்குண நற் செய்கையிலும் - சிறந்தவன் - எங்கள் குடும்பத்தில் கோகிலாவும் இவனுந்தான் - என் மனத்திற்குப்-பிடித்தவர்கள்” என்று சிறிது பிராயாசையோடு விட்டுவிட்டுப் பேசினார். அப் பாரசிகப் பொருமாட்டியாரும் "அகத்திலுள்ளது முகத்தில் தெரியும்' என்றபடி இவர் குணத்தின் விசேஷம் இவரது முகத்தில் நன்றாய் விளங்குகின்றது. இவர் நம் கோகிலாவைப் போலேதான் நல்லவராய் இருப்பாரென்று திண்ணமாய்த் தோன்றுகின்றது என்று சொன்னார்கள். என் தமயன் அவ்வம்மை யார் சொற்களைக் கேட்டு வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தவனாய்த்,

தக்கவன்

-

கல்வியிலும்

-

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/115&oldid=1582073" இலிருந்து மீள்விக்கப்பட்டது