உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

の

94

66

மறைமலையம் -14

'குழந்தாய், யான் சிறிது நேரத்துக்குமுன் சொல்லிய சொற்களைக் கேட்டு நீ நிரம்பவும் அச்சம் அடைந்திருக்கிறாய் என்று அறிகின்றேன்.சிறிதும் அஞ்சாதே.எனக்குப் பதினெட்டாவது வயதில் ஒரு கல்யாணம் ஆயிருந்தது. இப்போதிருக்கிற பேய் இரண்டாந்தாரமாவள். முதல் தாரக்காரி மகாஉத்தமி, அழகிலுங் குணத்திலும் லக்ஷிமியையே ஒத்தவள், கல்வியில் அவள் சரஸ்வதியே. அவளும் நானும் உயிரும் உடலும்போல் இணை பிரியா அன்பினராய் இருந்தோம். எங்களிருவர் அன்பின் பயனாகச் சுவர்ணவிக்கிரகம் போன்ற ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதனை நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்த்து வந்தோம். அந்தக்குழந்தைக்கு ஐந்து வயதாகிற போது அதன் தாய் மாரடைப்பு நோயினால் ஐயோ! சடுதியில் இறந்துபோனாள்! உயிரினுஞ் சிறந்த மனையாளைப் பறிகொடுத்த துயரம் ஒருபுறம் வருத்தத் தாயற்ற என் அருமைக் குழந்தையின் நிலைமையானது என்னை மற்றொருபுறம் நீராய் ருக்கி வந்தது. இந்தக் குழந்தையை பாதுகாக்கும் பொருட்டுத் திரும்பவும் நான் விவாகஞ் செய்து கொள்ள வேண்டுவதாயிற்று. என் செய்வேன்! இப்போதுள்ள பேயை என் உறவினரெல்லாருஞ் சேர்ந்து என் கழுத்துக்குக் கயிறாய்க் கொண்டு வந்து கட்டிவைத்தார்கள். நான் நினைத்தற்கு மாறாக, இப்பேய் என் அருமைக்குழந்தையைப் படுத்தி வைத்தபாடு இன்னும் எத்தனை பிறவியெடுத்தாலும் என் நெஞ்சை விட்டு நீங்காது. என் அருமை மகள் ஒரு தெய்வக் குழந்தையாகவே வளர்ந்தது! அதன் அறிவு நுட்பத்தையும், அடக்க ஒடுக்கத்தையும், கல்விப்பயிற்சியையும், இரக்கக் குணத்தையும், தெய்வ சிந்தனையையும் பேரழகையும் ன்னும் மற்ற உயர்குணநலங் களையும் என் ஒரு நாவால் எங்ஙனம் எடுத்துச் சொல்வேன்! அவ்வருமைக் குழந்தையை உனக்கே ஒப்பாகச் சொல்லவேண்டும். ஐயோ! நினைக்கவும் என் நெஞ்சம் பகீரென்கின்றதே! அக் குழந்தைக்குப் பத்தாவது வயது வந்தது. ஒருநாள் நான் வெளியே போயிருந்து வந்தேன். அப்போது என் அருமைக் குழந்தை படுக்கை மேல் ஏதும் அரவமின்றி அமைதியாய்க் கிடந்தது.உடனே யான் பதைபதைத்து அதனருகே சென்று, 'குழந்தே, யான் வருங் காலங் களிலெல்லாம் எதிரோடிவந்து என்னைக் கட்டிக்கொள்வாயே இன்றைக்கு ஏன் இப்படிப் படுத்துக்கிடக்கிறாய்?" என்று தடுமாற்றத் தோடு கேட்டேன். அதற்கு அம்மகவு அப்பா, சித்தி ஏதோ தின்னக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/123&oldid=1582081" இலிருந்து மீள்விக்கப்பட்டது