உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

95

நீ

கொடுத்தாள்; முதலில் நான் அதைத் தின்னாமல் வைத்துக் காண்டிருந்தேன். அவள் ‘அது ரொம்ப ருசியான பண்டம், தின்று பார்' என்றாள்; அப்படியே தின்றேன். இப்போது எனக்கு மயக்கந் தலைக்கேறுகிறது. நான் இனிமேல் சித்திகிட்ட இருக்கமாட்டேன். நான் என் அம்மாகிட்டப் போகிறேன். நீ சித்தியை ஒன்றுஞ் செய்ய வேண்டாம். ஆனால், நீ மாத்திரம் பத்திரமாய் இரு' என்று சொல்லி விட்டு இறந்தபோயிற்று என்று சொல்லுகையில் என் மாமனார் கண்ணீர் ஆறாய்ப்பெருக ஆற்றாமல் அழுதார். மிகவும் நோய்ப் பட்ட நிலையிலிருக்கும் என் மாமனார் மிகவும் துயரம் அடைவதைப் பார்த்து என் நெஞ்சம் நெக்குடைந்தது, அதனை ஒருவாறு தேற்றிக் கொண்டு,

L

"மாமா, நோயாயிருக்கும் நீங்கள் இப்படி வருந்தலாமா? கொஞ்சம் ஆறுதல் அடையும்படி கெஞ்சிக்கேட்டுக் கொள்ளு கிறேன்” என்று அவர் கண்களைத் துடைத்தேன். அவரும் ஒருவாறு மனம் தேறிக் “குழந்தாய், அம்மகவு இறந்து ஒருமாதம் வரையில் நான் புத்திசுவாதீனம் இன்றியிருந்தேன். அவ்வொரு மாதம் வரையில் இங்கே நடந்தது இன்னதென்று எனக்குத் தெரியாது. அவ்வொருமாதமுங்கழித்து என் புத்தி முன் நிலைமைக்கு வந்தது. முன்னே சுவர்க்கம் போலிருந்த என் வீடு இப்போது பாழடைந்து மிகவும் துக்ககரமாயிருந்தது. என் ரண்டாந்தாரப் பேய் நாடோறும் இராக்காலத்தில் அலறு வதாகவும் அன்ன ஆகாரம் இன்றி மிகமெலிந்து பாயும் படுக்கை யுமாய்க் கிடந்து அளவுபடாத துன்பத்தை அடைவதாகவும் என் அருகிருந்து உபசரித்த உறவினர்ச் சிலர் சொல்லக்கேட்டு என் அருமைக் கண்மணியைக் கொலைசெய்த அவள் அப்படி வருந்துவதற்குக் காரணம் யாதாய் இருக்கலாம், அவள் என் மகளைப்பற்றி வருந்துவதற்குக் காரணம் இல்லையேயென்று எண்ணமிட்டுக் கொண்டிருந்தது. அன்றிராத்திரி அவள் அலறு கிறசத்தங்கேட்டு, அவள் படுக்கையறையின் அண்டையிற்போய் மெல்ல உள்ளே பார்த்தேன்; ஓ! என் கண்களுக்குப் புலனான அவ்வடிவத்தின் பயங்கரமான தோற்றத்தை எவ்வாறு

எடுத்துரைப்பேன்! குழந்தாய், அஞ்சாதே! அது தீயோரைத் தண்டிக்கவந்த தேவரூபமேயன்றி வேறன்று. அது மிகவும் கறுத்துப் பருத்து நீண்டிருந்தது; அதன் முகமும் அங்க அடையாளங்களும் செவ்வையாகத் தெரியவில்லை; என்றாலும், அதன் கையில் ஒருசாட்டைக்கோல் இருந்தது. அக்கோல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/124&oldid=1582082" இலிருந்து மீள்விக்கப்பட்டது