உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

மறைமலையம் -14

சி

முனையிலிருந்து தொங்கிய மணிக்கயிற்றில் ஒரு வரிசையாகப் பெரிய கருந்தேள்கள் ஒட்டிக்கொண்டிருந்தன; அச் சாட்டைக் கயிறு அவ்விரண்டாந்தரப் பேயின் முதுகின்மேற் பளீர் பளீர் என்று அடித்தது; அங்ஙனம் அடிக்கையில் அக்கயிற்றின் நெடுக உள்ள தேட்கொடுக்குகள் அவள் முதுகினுள்ளே பாய்ந்து பாய்ந்து வருதலையும், அவள் அப்போது என்னாற் பார்க்கவுஞ் சொல்லவுங் கூடாதவிதமாய்த் துடித்தலையுங் கண்டு அரைவா உயிர் பிரிந்தவன் போல் உணர்விழந்து நிலைத்தின்மேற்களைத்து வீழ்ந்தேன்.என்னை அறியாத ஓர் உறக்கம் வந்து என் கண்களை மூடியது. அங்ஙனஞ் சிறிதுநேரம் உணர்விழந்து கிடந்தபின், திரும்பவும் என் உணர்வு எனக்கு மிகவுந் தெளிவாக வரப் பெற்றேன். இன்னும் என் கண்கள் நன்றாக மூடித்தான் இருந்தன; ஆனாலும் என் மனைவியின் படுக்கையறையை நான் நன்றாய்க் கண்டேன். அவள் படுக்கையைச் சூழக்கரிய ஒர் இருள் சூழ்ந்திருந்தது. அவ்விருள் வட்டத்தின் புறத்தே முன்னே நான் கண்டவடிவம் இன்னும் நின்று கொண்டுதான் இருந்தது. ஆனால் இப்போது அதனைச்சூழ மிகவும் பிரகாசமான ஓர் ஒளிவட்டந் தோன்றியது; முன்னே என் கண்ணுக்குப் புலனாகாதிருந்த அவ்வடிவத்தின் முகமும் அங்க அடையாளங்களும் இப்போது எனக்கு மிகவுந் தெளிவாய் விளங்கின; ஆயினும், என் கண்கள் இன்னும் மூடியே இருந்தன. அந்தத் திருவுருவத்தின் முக அழகும் மற்ற அங்கங்களின் அழகும் இந்நிலவுலகத்தில் யான் என்றும் கண்டிராத தன்மை யோடும் விளங்கின. அதனை இந் நிலைமையிற் கண்டதும் முன் என துள்ளத்தே நிகழ்ந்த அச்சமெல்லாம் நீங்கப்பெற்றேன். என் நெஞ்சகத்தே என்னை அறியாத ஓர் ஆற்றாமையும் அன்பும் வரப் பெற்றேன். உடனே, ஆண் வடிவாய்த் தோன்றிய அத்திருவுருவத்தை நோக்கி அழுதேன். பின்னர் அதனை வாழ்த்தினேன், வணங்கினேன்; நானிருந்தநிலை கனவோ நனவோ இன்னதென்று என்னால் துணிந்துரைக்கக் கூடவில்லை; என்கைகால் முதலான எந்த அவயவமும் ஆடவும் இல்லை, அசையவுமில்லை; என்னால் எழுந்து அதனருகே செல்லவுங் கூடவில்லை; என்றாலும் என் உணர்வுமாத்திரம் நிரம்பவுந்தெளிவாயிருந்தது; எல்லாம் எனக்கெதிரே மிகுந்த விளக்கத்தோடுந்தோன்றின. அவ்வழகிய திருவுருவத்தைக் காணக்காண என் உள்ளம் குளிர்ந்தது; ஆரா மகிழ்ச்சி அடையப்பெற்றேன். அதனை யான் வணங்குவதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/125&oldid=1582083" இலிருந்து மீள்விக்கப்பட்டது