உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

97

வாழ்த்துவதுமெல்லாம் மனத்தாற் செய்தேன். பிறகு அதனை மிகவுங்குழைவோடுதொழுது 'ஐயனே! தேவரீரைச் சிறியேன் இன்னாரென்று உணரப்பெற்றிலேன்.பெரும்பாவிகளான எங்கள் முன்னிலையில் தேவரீர் எழுந்தருளுதற்குக்காரணம் யாதோ அறிவித்தருளல் வேண்டும் என்று வேண்டினேன். அப்போது அது தன் அழகிய மலர்வாய்திறந்து ‘பிள்ளாய்! உலகத்தின் கண் உள்ள உயிர்கள் செய்யும் நல்வினை தீவினைகளை அளந்து பார்த்து நல்லார்க்கு அருள்புரிந்தும் பொல்லார்க்கு இருள்நரகந்தந்தும் எல்லா உயிர்களையும் பரிசுத்தஞ்செய்து வரும் எல்லாம் வல்ல அறக் கடவுளுக்குத் தொண்டுசெய்து வரும் அடியார் குழாத்துட்சேர்ந்த ஒரு தேவன்யான். தீவினைகளுள் மிகக் கொடியது ஓர் உயிரைக் கொலைசெய்வதேயாம்; அக்கொலையுள்ளம் மிகக் கொடியது களங்கம் அற்ற இளம்பருவச்சிறாரைக் கொல்வதேயாம்; அதனினும் மிகமிகக் காடியது அறிவும் அழகும் அன்புங்குடிகொண்ட சிறுவரைக் கொல்வதேயாகும். இதோ! இங்கே கிடக்கின்ற இப்படுபாவி உன் அருமைக்குழந்தையை நஞ்சு ஊட்டிக் கொன்றாள்! இவள் செய்த இப்பாவத்தினுங் கொடியது வேறு இல்லாமையால் இவளை இப்பிறவியிலேயே எதிர்நின்று தண்டித்து இவள் பாவத்தைத் தீர்த்தற்பொருட்டு அறக்கடவுளால் ஏவப்பட்டு வந்தேன். மிக்க பாவஞ்செய்த இவள் கட்புலனுக்குக் கரிய கொடிய உருவமாய்க் காணப்படுகின்றேன். நீயும் சிலபல பாவங்கள் செய்தவ னாகையால் நீ நின் ஊனக்கண்ணாற் பார்த்தபோது கரிய வடிவத் தோடுங் காணப்பட்டேன்.இப்போது நீ சூக்ஷும சரீரத்தில் நின்று அன்போடுருகி ஞானக் கண்ணாற் பார்த்தலால் எனது உண்மையான வடிவத்தோடுங் காணப்படுகின்றேன்' என்று அருளிச் செய்தது, உடனே யான் அதனைக் கைக்கூப்பித்தொழுது என் பெருமானே, யானும் பாவியேனாயினும், தேவரீர் திருவுருவத்தைக் காணுதற்குச் சிறிதேனுந் தவம் பண்ணினேன். யான் புனிதன் ஆயினேன்; இக்கொடும் பாவி இன்னும் எத்தனை நாள் இங்கே தண்டிக்கப்படுதல் வேண்டும்?' என்று பணிவாக வினவினேன். அதற்கு அது 'பெரும்பாலும், இவ்வுடம்பில் இவளைத் தண்டிக்கவேண்டு மளவுந் தண்டித்தாயிற்று. இனித் தண்டிப்பின் இவள் அதனை இவ்வுடம்பிற்றாங்காள். இனிக் கொலைச்செயலை இப்பிறவியிலும் இனிவரும் பிறவிகளிலும் சிறிதும் நினையாள். இவள் பெற்ற இளங்குழந்தைகள் மூன்றையும்

கி

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/126&oldid=1582084" இலிருந்து மீள்விக்கப்பட்டது