உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

மறைமலையம் -14

இவள் பாதுகாக்க வேண்டியிருத்தலின் இனி நாளையோடு இவள் தண்டனையை நிறுத்துவோம். நீ நல்லனாயிருத்தலின் இவள் அடையும் இக்கொடுந்தண்டனையை நீ சிறிதும் உணராதிருத்தற் பொருட்டு, நீ மகளையிழந்த துயரத்தையே ஒரு காரணமாய்க் கொண்டு உன்னைச் சென்ற ஒரு திங்களாக உணர்வின்றிக் கிடக்க வைத்தோம். உன் மனையாளை இவ்வளவு தண்டித்தும் அவளுக் குரிய கொடுங் குணமானது நீண்டகாலம் வரையில் அவளை விட்டு அகலாது. அவளால் நீ இன்னுந் துன்புறத்தப்படுவை. உன்னாற் பொறுக்கக் கூடாத அளவு அவள் உன்னைத் துன்புறுத்துங் காலங்களில், என்னை நினைப்பையாயின், யான் அவளெதிரிற்றோன்றி அச்சுறுத்துவேன். நாளை உன் உறவினர் சிலரோடு இந்நேரத்தில் இவள் படுக்கையண்டை வந்து திருநீற்றையள்ளி இவட்குக்கொடுப்பை யானால், அது முதல் யான் இவட்குச்செய்யுந் தண்டனையை நிறுத்திக் கொள்வேன் ன்றருளியது. திரும்பவும் யான் அதனை வணங்கி ‘என் ஆண்டவனே’, கொலைப்பாவத்திற்கு மாத்திரந்தான் இத்தண்டனையோ; எல்லாப்பாவங்களுக்கும் இதுபோல்வ துண்டோ? இத்தண்டனை இப்பிறவியோடு ஒழியுமோ? மறுமையிலும் உண்டோ? செய்தபாவங்களை இறைவன் மன்னிப்பதுண்டோ? இல்லையோ? சிறிது அருளிச்செய்தல் வேண்டும்' என்று இரந்து கேட்டேன். அதற்கு அது'கொலைப் பாவத்திற்கு மாத்திரந்தான் இக்கொடுந்தண்டனை, இறைவன் செய்யும் படைப்புத் தொழிலுக்கு இடர்புரியாத மற்றப் பாவங்களுக்கு இத்தகைய கொடுந்தண்டனை சிறிதும் இல்லை. இக்கொடுந்தண்டனை முழுதும் இப்பிறவியில் இவ்வுடம்பு தாங்காது. ஆயைால், சூக்கும உடம்பில் இவ்வுயிரைக் கொண்டு போய் வேறு உலகங்களில் வருத்துவோம். பாவம் செய்த உயிர் அப்பாவத்தின் பொல்லாங்கை உணர்ந்து அறிவும் அன்பும் உடையதாகி இறைவனை வழுத்தி மன்னிப்புக்கேட்குமாயின் எவ்வகைப் பாவமும் மன்னிக்கப்படும் என்று கருணையோடும் டை பகர்ந்தது. அதனால் மனம் தேறுதல் அடைந்தேனாகிப் பின்னும் அதனை நோக்கி என் தெய்வமே! அடியேன் தேவரீர் திருவுருவத்தை மறுபடியும் கண்ணாரக்காணும் புண்ணியம் பெறுவேனா?' என்று உருக்கத்தோடும் வினவினேன். அதற்கது, 'நீ இவ்வுலகத்தைத் துறந்து செல்லுதற்கு மூன்று நாட்களின்முன் நனவிலேயே, நீ இப்போது பறிகொடுத்த அருமைப் பெண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/127&oldid=1582085" இலிருந்து மீள்விக்கப்பட்டது