உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

நான்

66

மறைமலையம் -14

"குழந்தாய், நீ இப்படி வருந்துவது கூடாது. என்றைக் கிருந்தாலும் ஒரு நாளைக்கு நான் இறக்க வேண்டுவது உறுதி தானே. புல்லின் முனைமேல் உள்ள நீர்த்துளியானது எந்த நேரத்திலாயினுங் காற்றால் அசைந்து கீழ்விழுமன்றோ? காற்று இல்லையானாலும், வெயிலால் ஆவியாகமாறிப்போகுமன்றோ? இந்தக் கூட்டைவிட்டுப் போனாலும் சூக்ஷும் சரீரத்திலாயினும் ஒவ்வொருகால் திரும்பி வந்து உனக்கு ஆறுதல் தந்து செல்வேன். இப்போது அவ்வழகிய தேவவுருவத்தைத் தியானிக்கப் போகின்றேன். நீ அதிபரிசுத்தமுடைய பெண்மணி யாயிருத்தலால் நீயும் அவ்வருள்வடிவைத் தியானிப்பையானால், ஒருகால் அஃதுன் கண்ணுக்குப் புலப்பட்டாலும் புலப்படும்' என்று சொல்லினார்.

இனி

என் மாமனார் சொல்லிய சொற்களின் உண்மையை நினைந்து பார்த்து ஆற்றாமல் வருந்துவதிற் பயனில்லையென்று என் மனத்தை ஒருவாறு தேற்றிக்கொண்டு, அத்தெய்வத்தை அன்புடன் நினைத்து ‘என் கண்ணுக்குத் தென்படும்படி குழைந்து வேண்டியிருந்தேன். என் மாமனாரும் ஏதும் வாய்பேசாமல் அமைந்த முகத்தோடு கீழ்நோக்கிய பார்வையிலிருந்தார். அங்ஙன மிருந்த சிறிது நேரத்திற்கெல்லாம் எங்கட்கு எதிரிலே மேலே ஆகாயத்தில் ஒரு பேரொளிவட்டம் ம் மினுமினு வென்று கிளர்ந்து தோன்றியது. அவ்வளவு அமைதியும் அழகும் வாய்ந்த ஒரு பேரொளிப் பிழம்பை இதற்குமுன் யான் எங்குங் கண்டதேயில்லை; அவ்வொளியைப் பார்க்க என் கண்கள் சிறிதுங் கூசவில்லை; அவ்வொளிவட்டத் தோற்றத்தை அடுத்து அற்புதமான ஒரு மணங்கமழ்ந்தது; அதனையடுத்து மின்னொளி யில் திரட்டி அமைத்தாற்போன்ற அவ்வழகிய ஆண்தேவவடிவம் அவ்வொளி வட்டத்தின் நடுவில் தோன்றியது. அத்தேவனின் முகத்திற் பொழிந்த அருள் அழகையும், அம்முகத்தில் விளங்கின கருணை ஒழுகு விழிகளின் பொலிவையும் மற்ற அங்கங்களின் திருந்திய தெளிவையும் பேதையேன் என் ஒருநாவால் எங்ஙனம் எடுத்து மொழிவேன். அதனைக் கண்டதும் என் மாமனார் தம் கைகளைத் தலைமேற் குவித்துக்கொண்டு கண்ணீர் ஆறாய்ப்பெருக வாழ்த்தினார்; அடியேனும் அங்ஙனமே கைகூப்பி வேறெதுஞ் சொல்லத் தெரியாமல் ‘என் ஐயனே! என் அப்பனே! என்றேன். அத் திருவுருவம் எங்களை நோக்கிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/129&oldid=1582087" இலிருந்து மீள்விக்கப்பட்டது