உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

மறைமலையம் -14

தவறுகளையெல்லாம் நீ பாராட்டக்கூடாது. அப்பா இறந்து போன பிறகு அவர்கள் மனந் திருந்தியிருக்கிறார்கள். அவர்கள் உன்னிடத்திற் கொடுமையாக நடந்து கொண்டதைப் பற்றி இப்போது மெத்தவருத்தப் படுகிறார்கள்” என்றான்.

இ இவன் இப்படிப் பேசுவதெல்லாம் என் கையிற் பணமிருப் பதனாலேயே என்று தெளிவாக உணரலானேன். ஈட்டி எட்டின மட்டுங் குத்தும் பணம் பாதாளமட்டும் குத்தும்' என்ற பழமொழி உண்மையாகவே இருக்கின்றது. பணம் இருந்தால் எல்லா வல்லமையும் உண்டு; பணமில்லாதவர்கள் பிணமென்றே உணரப் பெற்றேன். பணத்தின் பொருட்டு இங்குள்ளவர்கள் எனக்குத் துன்பஞ் செய்யாமல் நடப்பதுபோற் காட்டுவார் களாயினும், உள்ளுக்குள் அப்பணத்தைப் பறிக்க வேறு என்னென்ன சூழ்ச்சி செய்வார்களோவென்றஞ்சினேன். பொருளை இழந்து போவது பற்றி யான் வருத்தப்படவில்லை. வரும்போது பொருளைக் கொண்டு வந்தோமா? போம்போது அதனைக் கொண்டு செல்லப் போகிறோமா? “காதற்ற ஊசியும் வாராதுகாண்நின்கடைவழிக்கே" என்பது முற்றுமுணர்ந்த மேலோர் திருவாக்கன்றோ? ஆனாலும், இவ்வளவு பெரும் பொருளை இவர்கள் கையில் வைத்திருந்தால் நல் வழியில் அதனைப் பயன்படுத்தாமையோடு தீயவழியிலுந் தாராளமாய்ச் செலவிட்டுப் தேடிக்கொள்வார்

பழிபாவாங்களைத் ட

களென்பதைச் செவ்வையாக உணர்ந்தன்றோ என்னருமை மிக்க மாமனார் அதில் ஒரு பெரும்பாகத்தை எனக்கு எழுதிவைத்தார்? ஆகையால், அதனை என்னால் இயன்றமட்டும் பாதுகாத்து அவரால் அறிவிக்கப்பட்ட நல்வழிகள் பலவற்றிலும் அதனைப் பயன்படுத்துவதன்றோ எனது பெருங்கடமை என்று எண்ண மிட்டுக் கொண்டிருந்தேன். அன்றைக்கு என் மைத்துனனும் அவ்வளவோடு அப்பேச்சை விட்டுவிட்டான். அடுத்தநாள் என்னோடு பேசுகையில் பின் வருமாறு சொல்வானானான்.

"கோகிலா, அப்பா இருந்தபோது ஆங்கிலமாவது தமிழாவது நன்றாய்ப் படியாமற்போனேன். எந்த அலுவலிலும் போய் அமரப் போதுமான படிப்பில்லை. குடும்பப் பாரமோ இப்போது என் தலையிற் பொறுத்திருக்கின்றது. நமது வீட்டுச்செலவுக்குத் தக்கவரத்து இல்லை. ஏதேனும் ஒரு

பெருவியாபாரமாவது செய்யலாமா என்று எண்ணிக்

கொண்டிருக்கின்றேன், உனது கருத்தென்ன?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/143&oldid=1582110" இலிருந்து மீள்விக்கப்பட்டது