உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

113

“நீ இவற்றை எப்படி அறிந்தாய்?” என்று வினாவினேன்.

66

என் பங்குக்கு இருபதினாயிரம் எழுதி வைத்திருக்கிற பத்திரத்தை எடுத்துப் படித்துக்காட்டும்படி என் தாயும் தமக்கையுங் கேட்டார்கள். அப்படியே நான்படிக்கப் பிறகு மற்ற எண்பதினா யிரத்தைப் பற்றி என்னை விவரங்கேட்டார்கள். எனக்குத் தெரியா தென்று சொல்லவே, அவர்களிருவரும் யோசித்துப் பத்திரம் பதிவு செய்தவரைக் கேட்டால் தெரியு மென்று எனக்கு உளவு சொன்னார்கள். வழிதெரிந்தபின் அந்த ரகசியத்தைக் கண்டுபிடிப்பது எனக்கொரு பெரிதா?” என்று தன்னை வியந்து கூறினான்.

6

66

"இவ்வளவு திறமைஉடைய உனக்கு நான் சொல்ல வேண்டுவது வேறென்னஇருக்கின்றது? அஃதிருக்கட்டும். உன் தாய் தமக்கையர் வேறென்ன சொன்னார்கள்?” என்று கேட்டேன்.

“கோகிலம் நம்ம ஆத்துக்கு வந்தவளானதால் அவளுக்கு அவ்வளவு தொகை கொடுக்கவேண்டியதுதான்; அவள் தமையன் நம்ம இனத்தாரில் பி.ஏ. பரிட்சை தேறினவனாதலால் அவனுக்கும் அவ்வளவு தொகை கொடுக்கவேண்டியதுதான் என்று சொன்னார்கள்” என்றான்.

இவன் சொல்லிய இது சிறிதும் நம்பத்தக்கதன்று. இவன் தாய் தமக்கையரின் குணப்பாங்கை நான் செவ்வையாக அறிந்திருப் பதனால், அவ்வளவு பெருந்தொகையை எங்க ளிருவர்க்கும் பகுத்துக் கொடுத்ததைப்பற்றி அவர்கள் வயிறெரிந்து வைத்திருப் பார்களேயல்லாமல் இவன் சொல்லிய படி மகிழ்ந்து பேசி இரார்கள் என்பது திண்ணம். உண்மை அவ்வாறிருக்க, இவன் இப்போது இசைந்து பேசியதைப் பார்த்தால் இவனும் இவன் தாய் தமக்கையரும் என் கையிலிருக்கும் பொருளைப்பிடுங்க ஏதோ சூழ்ச்சி செய்திருக்கிறார் களென்பது தெரிகின்றது. ஆதலாற் பின்னும் இவனை ஆராய்ந்து பார்க்கலாமென்றெண்ணி, "நல்லது, இனி ஆகவேண்டுவது என்ன?” என்று கேட்டேன்.

“நீ இந்த வீட்டுக்கு முதல் மருமகளாதலால் இங்கே எல்லா வற்றிருக்கும் நீதான் தலைமையாக இருந்து எல்லாவற்றையும் நடத்தி வைக்கவேண்டும். என் தாய் தமக்கையர்கள் அறிவில்லாதவர் களாகையால், அப்பா இருந்தபோது ஏதோ உன்னைக் கொடுமையாய் நடத்தி விட்டார்கள். கடந்துபோன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/142&oldid=1582109" இலிருந்து மீள்விக்கப்பட்டது