உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

❖ LDMMLDMELD -14❖

கடிதங்களையும் என்கையிற் சேர்ப்பிக்கவும் என்னருமைத் தங்கை நேரம்பார்த்து மிகவுந் திறமையோடும் பேர் உதவி புரிந்து வந்தாள். என் பெற்றோருந் தங்கையுந் தமதில்லத்திற்கு ஏகிச் சற்றேறக் குறையப் பத்துநாட்கள் ஆயின. இப்போது என் தமையன் மட்டும் என்னை அடிக்கடி வந்து பார்த்துப்போகிறார். என் பெற்றோர்களோடு எங்கள் இல்லத்திற்கு யான்போக விரும்பியும், அவர்கள் என்னை அழைத்துக்கொண்டு போக இசையாமற் சென்றதைப்பற்றி என் உள்ளம் வெதும்பியது. அது போகச், சென்ற பத்துநாட்களாய் எனக்குப் புதிய ஒரு துன்பம் முளைத்திருக்கின்றது. என் மைத்துனர் ஐந்தாறு நாட்களாய் என்னிடம் மிகவும் அன்பாக நடந்து வருகிறான். மாமியும் நாத்துணாருங்கூட என்னிடம் அன்பு காட்டுகிறது போற் காணப்படுகின்றனர்.

ஏழெட்டு நாட்களுக்குமுன் என் மைத்துனன் தனியே என்னிடம் வந்து “கோகிலா, ஏதொன்றும் நீ என்னிடம் திறப்பாகச் சொல்லு கிறாயில்லையே. நீ ஏன் இவ்வளவு மௌனமாக இருக்கவேண்டும்?" என்று கேட்டான்.

“உன்னிடம் யான் எதைத் திறப்பாகச் சொல்லவில்லை? பேச வேண்டியதொன்றும் இல்லாமையாற் கல்வியிலேயே எனது காலத்தைக் கழித்துவருகின்றேன்” என்று அவனுக்கு மறுமொழி புகன்றேன்.

"நல்லது, என் தந்தையார் லட்சரூபாய்க்குச் சொத்து உடைய வராயிற்றே. எனக்கு, இருபதினாயிரந்தானே எழுதிவைத் திருக்கிறார்? மற்ற எண்பதினாயிரமும் எங்கே?" என்று வினாவினான்.

இவன் அத்தனை நுண்ணறிவு இல்லாதவனாகையால் இவனைத் தட்டிக்கொடுத்து இவன் வாயினாலேயே இவன் எவ்வளவு தெரிந்திருக்கின்றானென்பதை உணர, “நீ மிகுந்த திறமை யுடைவனாகையால் நீயேயெல்லாந் தெரிந்திருப்பாய் என்று எண்ணினேன். ஆனால், உனக்கொன்றுந் தெரியாதா?' என்று கேட்டேன்.

ஓ! எனக்கெல்லாந்தெரியும். உனக்கு நாற்பதினாயிர ரூபாயும் உன் தமையனுக்கு நாற்பதினாயிர ரூபாயும் என் தகப்பனார் எழுதி வைத்திருக்கிறார் அல்லவா?” என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/141&oldid=1582107" இலிருந்து மீள்விக்கப்பட்டது