உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

111

தவறாயின் என்னை மன்னிக்கும் படி தங்களைப்பலகாலும் வேண்டிக் கேட்டுக் கொள்ளுகின்றேன். எல்லாம் உணர்ந்த தங்களுக்குப் பேதையேன் எழுதவேண்டுவது என் உண்டு!

எம்மவர் சுயகாரியப்பிரியர் என்பதற்குச் சென்ற ஒரு மாதமாக இங்கு நடந்து வருபவைகளே போதிய சான்றாகும். அருமையிற் சிறந்த என் மாமனார் உயிர் துறந்த மறுநாட்

காலையிலேயே என் பெற்றோரும் அருமைத் தங்கை தனலட்சுமியும் இங்கு வந்து இருபது நாள் வரையிலிருந்து பத்து நாட்களுக்கு முன் தான் வீட்டுக்குத் திரும்பிச் சென்றார்கள். அவர்கள் இங்கேயிருந்தது அங்கேயிருந்தது ஒருவகையில் ஆறுதலாயும் மற்றொருவகையில் வருத்தமாயும் எனக்குத் தோன்றிற்று. அவர்கள் இங்கேயிருந்தவரையில் மாமியாரும் நாத்துணாரும் என்னைத் துன்புறுத்துவதற்கு இடமில்லா திருந்தது. ஆனாலும், திருந்தது.ஆனாலும், என்னைப்பெற்ற அன்னை எப்போதும் போல என்னிடத்தில் தாராளமான அன்போடு நடந்துகொள்ளாமையும், என் தந்தையார் என்னோடு பேசியபோதெல்லாம் முகக் கடுகடுப் போடு சுருக்கமாய்ப் பேசினமையும், என் தங்கையாவது, தமையனாவது என்னோடு தனித்துப் பேசுதற்கு என் பெற்றோர்கள் இடந்தராது வந்தமையும் என் நெஞ்சத்தைப் புண் ஆக்கின. துக்கங் கொண்டாடவந்த எங்கள் சாதிப் பெண்பாலாரெல்லாம் என்னைப் பாராமுகமாய் நடத்திச் செல்லும்படி மாமியும் நாத்துணாரும் ஏதேதோ அவர்கள் காதிற் சொல்லிவந்ததும் அப்புண்ணிற் கோல் நுழைத்தாற் போலாயிற்று. அப்பாரசிக குடும்பத்தாராவது இடைக் கிடையே இங்கு வந்திருந்தால் அஃதெனக்கோர் ஆறுதலைத் தந்திருக்கும். அவர்கள் வருவதற்கும் வழியில்லாமற் போயிற்று. அவர்கள் வருகையினாலேயே என் மாமனார் இறக்கலானார் என்னும் பழிச்சொல்லை மாமியும் நாத்துணாரும் வருவார் போவாரெல்லாரிடத்தும் ஒரு பாடமாய்ச் சொல்லி வந்தனர். நுண்ணறிவிற் சிறந்த அப்பாரசிகப் பெருமானும் பெருமாட்டியும் இவ்வாறு பழிச்சொற் பரவுமென்பது முன் உணர்ந்தே இங்கு வராமல் நின்று போனார்களென்று, அவ்வம்மையார் இடை கிடையே என் தமையன் வாயிலாக எழுதிவிடுத்த அன்பான துன்டுக்கடிதங்களாற் றெரிந்து கொண்டேன். என் தமையன் என்னைத் தனியே சந்தித்துப் பேச இடம்பெறாமையால், இத் துண்டுக்கடி தங்களையும் தாங்கள் எழுதின எழுதின அன்பான

க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/140&oldid=1582106" இலிருந்து மீள்விக்கப்பட்டது