உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

-

கடிதம் 10

சென்ற ஒரு திங்களாகத் தங்களுக்குக் கடிதம் எழுதக்கூடாது போனமைபற்றி ஏக்கம் அடைந்தவளாய் இருக்கின்றேன். இதற்கிடையில் தங்களிடமிருந்துவந்த இரண்டு கடிதங்களும் எனக்குப் பெருமகிழ்ச்சியையும் பேராறுதலையுந் தந்தன. இக் கடிதங்களில் தாங்கள் குறிப்பிட்டிருக்கும் ஒரு செய்தி என் உள்ளத்திற் கலக்கத்தை விளைவிக்கின்றது. தங்களுக்குச் சேதுராமன் என்னும் ஒரு பார்ப்பன இளைஞனின் நேசம் கிடைத்திருப்பதாகவும், அவன் தங்களிடத்தில் மிகுந்த அன்புடை யவனாய் நடத்தலின் தாங்களும் அவன் மேல்நிரம்ப அன்புவைத்து ஒழுகுவதாகவும், அவன் நம்மிருவர் நேசத்தையும் அறிந்து களிப்பதோடு நமக்கு வேண்டிய உதவி யெல்லாஞ் செய்ய விரும்புவதாகவும் எழுதியிருக்கிறீர்கள். தாங்கள் அறிவிற் சிறந்தவர்களாய் இருந்தாலும் தங்களுக்கு இயற்கையாகவுள்ள ள நல்லதன்மையால், அன்புடையவர்போல் நடக்கும் எவரையுந் தாங்கள் எளிதில் நம்பிநடத்தலை நான் சிறு பருவ முதற் காண்டே உன்னிப்பாய்ப் பார்த்துவந்திருக்கின்றேன். எனக்கு இது சிறிது துன்பத்தைத் தருகின்றது. மேலுந், தங்கள் நண்பன் பார்ப்பன சாதிக்குரியவன் என்றதைக் கேட்டது முதல் என் மனம் ஐயுறவுடையதாய் இருக்கின்றது. நானும் பார்ப்பாரச் சாதியிற் பிறந்தவளேயாயினும் பார்ப்பனர் பலரோடும் பழகிப் பார்த்ததில் அவர்கள் பெரும்பாலுந் தங்காரியத்திலேயே கருத்துடையவர்க ளென்றும், பிறரது நன்மையைச் சிறிதாயினும் எண்ணிப் பாரார்க ளென்றுந், தங்காரியம் முடிப்பதற்கு எதுவுஞ் செய்யத் துணிவார் களென்றும் அறிந்திருக்கின்றேன். அதனால், அவர்கள் சொல்லி லாயினுஞ் செயலிலாயினும் எனக்குச் சிறிதும் நம்பிக்கை வைக்கக் கூடவில்லை. அவர்களிற் சிலர் நல்லவராகவும் இருக்கலாம். தங்கள் நண்பர் நல்லவராயிருக்கவுங்கூடும். என்றாலும் தங்களை எச்சரித்து வைக்க வேண்டுவது எனது கடமை யென்றெண்ணி இதனைக் குறிப்பிட்டேன். யானெழுதியது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/139&oldid=1582097" இலிருந்து மீள்விக்கப்பட்டது