உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

109

இங்கே நடக்கும் செய்திகளையும், இனிமேல் நடக்க வேண்டு வனவற்றையும் பற்றிச் சுப்ரமணியன் அடிக்கடி உங்களிடம் வந்து தெரிவிப்பான். எனக்கு மிகுந்த அயர்ச்சியாய் இருக்கின்றது. ஐயா என்னை முத்தமிட்டு விடை கொடுங்கள்! அம்மா, உங்கள் கையை நான் முத்தம் வைத்துக் கொள்கின்றேன்” என்று அவர்களிரு வரிடத்தும் அன்போடு கூறினார். அப்பாரசிககனவானும் அம்மையாரும் தாங்காத் துயரத்தினராய் மாமனாரை முத்தம் வைத்துக்கொண்டு பிரியமனமின்றியிருந்தும், இறக்குந்தறு வாயில் உள்ள அவருக்கு இனி வருத்தந்தராலாகாதென்று குறிப்பித்துக் கொண்டு, அவரது காலை அவ்விருவருந்தொட்டு வணங்கியபின், மெதுவாக அவ்வறையைவிட்டு வெளியே போவாராயினர். என் மாமனார் செய்த சைகைப்படியானும் என் தமையனும் அவர்களோடு தெருவாயில் வரையிற் சென்றோம். அவ்வன்னை யார் என்னைத் தமது கையில் அணைத்துக் கொண்டே நடந்தார். அப்பெருமான் என் தமையனை அணைத்துக்கொண்டு சென்றார். வாயிலண்டை வந்ததும் எங்களிருவர்க்கும் நிரம்பவும் உருக்கமான குரலில் ஆறுதல் மொழிகள் சொல்லிவிட்டு, "இன்னுஞ் சிலநாட்களில் நாமெல் லாம் ஓரிடத்தில் ஒன்றாயிருப்போம், கவலை வேண்டாம். இன்று இரவு முழுதும் பெரிய ஐயாவிடம் நீங்களிருவருங் கவனமா யிருங்கள்!” என்று அவ்வம்மையார் சொல்ல அதற்கிணங்கி அவர் கணவருஞ் சொன்னார். அதன்பின் நாளை மாலையில் தம்மை வந்து சந்திக்கும்படி அக்கனவான் என் தமையனுக்குத் தெரிவித்து வண்டியிலேறினார். அம்மையாரும் பின்னும் எனக்கு ஆறுதல் சொல்லி வண்டியிலேறிக் கொண்டார். இனி னி யெப்போது ஒருவரையொருவர் காண்குவமோ என்னுந் துயர நினைவால், வண்டி எங்கள் கண்ணுக்கெட்டாமல் மறையும் வரையில் நாங்கள் அவர்களையும் அவர்கள் எங்களையுமாகச் சிறிது நோக்கிநின்று அப்பால் உட்புகுந்தோம். உடனே என் தமையனை மாமனாரிடம் வைத்துவிட்டு, எனது மாலைக் கடனை முடித்து வந்து, நாளைக்குக் கடிதம் எழுத நேராதோ என்னும் அச்சத்தால் இதனை அப்போதே எழுதி என் தமையன் வாயிலாகத் தபாலுக்கு அனுப்பினேன். இனி னி நடப்பனவற்றைப் பிறகு எழுதுகிறேன். இன்று நிகழ்ந்தவை களால் என் உள்ளம் மிகக்கலங்கியிருக்கின்றது. என் அமுதனை யீர், உமது துணையையே நம்பி இவ்வுயிரைத் தாங்குகின்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/138&oldid=1582096" இலிருந்து மீள்விக்கப்பட்டது