உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

❖LDMMLDMOшILD -14❖

அளவில்லை. என் அன்பிற்கினிய கோகிலாவையும் அவள் தமயனையும் என் உயிர்போற் பாராட்டி வந்தேன். அவர்களும் என்னிடத்தில் நிறைந்த அன்போடும் அடக்கத்தோடும் நடந்துகொண்டார்கள். உங்களையும் இவர்களையும் பிரிவது எனக்குப் பெருந்துன்பத்தைத் தந்தாலும், ஈசன் இந்த உலகத்தில் இருக்கும்படி எனக்கு அளந்துபோட்ட நாள் முடிந்துபோயிற்று. என்றைக்கிருந்தாலும் நான் இறக்கவேண்டியதே. ஆதலால் அதற்காக நீங்கள் வருந்திப்பயனில்லை” என்று கூறினார்.

இவற்றைக்கேட்டு ஒருவாறு மனம் ஆறுதலடைந்த அப்பாரசிக கனவான், 'பெரியய்யா, இண்ணெராத்திரிக்கி எங்களெப் பிரிஞ்சு போரதாச் சொன்னிங்களே! அதென்ன?' என்று கேட்டார்.

என் மாமனார் என்னைப் பார்த்து நேற்றிரவில் தாம் எனக்குச் சொல்லியவைகளையும் தாமும் யானும் நேரேகண்ட காட்சிகளையுஞ் சிறிதும் விடாமல் விரிவாய் எடுத்துச் சொல்லும் படி எனக்குக் கட்டளையிட்டார். அதற்கிணங்கி யான் எல்லா நிகழ்ச்சிகளையும் வழுவாமல் எடுத்துக்கூற அப்பெருமானும் பெருமாட்டியாரும் என் தமையனும் மிகுந்த அச்சத்தோடும் வியப்போடும் அவற்றை முற்றுங்கேட்டார்கள்.இவற்றையெல்லாம் அப்பெருமாட்டியாருக்குக் கூறவெண்ணிய என் அவாவும் தீர்ந்தது. இவ்வளவும் முடிய மாலை ஏழரைமணியாயிற்று. மாமியும் நாத்துணாரும் பின் கட்டிற் சமயற்றொழிலில் நின்றமையால் இவ்வறைக்குள் நடந்ததொன்றும் அவர்கட்குத் தெரியாது; இ ஃது எனக்கு ஓர் ஆறுதலாயிருந்தது. வெளியே சென்ற என் மைத்துனனும் பண்டங்கள் வாங்கிக் கொண்டு அப்போதுதான் உள்ளேவந்தான். என் மாமனார் பின் ஏதோ நினைத்துக் கொண்டவராய் அப்பாரசிகரிருவரையும் பார்த்து, 'நாளை எனது சவச்சடங்குக்குத் தாங்கள் வரவேண்டாம். உயிர் போனபின் இந்த உடம்பின் பொருட்டுத் தாங்கள் வந்து வருந்தலாகாது. மேலும், எங்கள் பார்ப்பாரச்சாதியைச் சேர்ந்தவர்கள் நாளைக்குப் பெருங்கூட்டமாய் இங்கே வந்திருப் பார்கள். அவர்களுக்கு மட்டுமரியாதையாவது, தங்களைப் போலும் நல்லோர்களிடம் ம் நடந்து கொள்ளவேண்டிய முறையாவது சிறிதுந் தெரியா. தங்களைக் கண்டால் அவரவர்க்குத் தோன்றியவாறு தலைக்குத்தலை பேசுவார்கள்.

சில

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/137&oldid=1582095" இலிருந்து மீள்விக்கப்பட்டது