உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

107

பேசாது வாடிய முகத்தோடு என் மாமனாரை உற்றுப்பார்த்த வண்ணமாய் இருந்தோம். அவர்தம் களைப்புத் தீரும்பொருட்டு அவருக்கு ஏதாயினும் அருந்தக் கொடுக்க வேண்டுமென்பதை அப்பாரசிகப்பெருமான் குறிப்பிட்டமையால், யான் விரைந்து சென்று பின்கட்டுக்கதவைத் திறந்துகொண்டு சமயலறைக்குச் சென்றேன். ஐந்தரைமணி ஆகியும் இன்னுந் தூங்கிக் கொண்டிருந்த மாமியும் நாத்துணாருங் கதவுதிறந்த ஓசைகேட்டு அப்போதுதான் கண்ணைத் திறந்தார்கள். என்னைப் பார்த்ததும் அவர்கள் மறுபடியும் கண்ணை மூடிக்கொண்டார்கள்.யானோ சுக்கு நறுக்கியிட்டுக் காய்ச்சிய பாலிற் கற்கண்டு கலந்து அதனை ஒரு கண்ணாடிக் கிண்ணத்தில் ஊற்றியெடுத்துக்கொண்டு மாமனாரிடம் வந்து அதனை அவர் வாயிற் பொருந்தவைத்து அதனைப் பருகும்படி வேண்டினேன்; அவர் சிறிது கண்ணைத் திறந்து அப் பாலை மெல்ல மெல்லப் பருகினார். பின்னர்ச் சிறிது நேரங்கழித்துக் களைப்புத்தீர பெற்றவராகி அப்பாரசிக கனவானைப் பார்த்து இக்காரியத்தை இத்தனை விரைவில் ஒழுங்குபெற முடித்ததைப் பற்றி நன்றியறிவு கூறினார். அதன்பின் கையைப்பிடித்து அக்கனவானிடத்தும் அவர் தம் மனைவியாரிடத்துங் கொடுத்து இன்றுமுதல் இக்குழந்தை உங்கள் குழந்தையேயாவள்; னி இவளுக்கு ஏதொரு குறைவுமின்றி இவள் விருப்பப்படி நடத்தி வைக்கவேண்டிய மறுமணத்தைப் பற்றி உங்களிடத்தும் இவனிடத்தும் முன்னமே பேசியிருக்கிறேன். இனிமேல் யான் சொல்லவேண்டுவது ஒன்று மில்லை. நீங்கள் எல்லாரும் எல்லாச் செல்வங்களோடும் ஈரநெஞ்சத் தோடும் இறைவனிடத்தன்போடும் விளங்கி எல்லாஉயிர்க்கும் இன்பத்தையே செய்து இனிது வாழ்வீர்களாக! யான் இன்றிரவு இவ்வுலக வாழ்க்கையைத் துறந்து செல்வேன்!” என்று அடங்கிய குரலிற் சொன்னார்.

என்

66

இங்ஙனம் அவர் கடைசியிற் சொல்லியதைக்கேட்டு நாங்கள் எல்லாருந் துன்பக் கடலில் அமிழ்ந்தினவர்களாய் ஏதும் வாய்பேசக் கூடாமல் கண்ணீர் உதிர்த்துக் கொண்டிருந்தோம். எங்களுடைய துன்பத்தைப் பார்த்து என் மாமனார் தாமும் மிகத் துன்புற்று "என் செய்யலாம்! பேயோடு பழகினாலும் பின் அதனைப் பிரிந்து போகும் போது ஆற்றமுடியாத் துன்பமே நேரும். நல்லவராகிய உங்களோடு பழகிய காலம் சுருக்கமான தாயிருந்தாலும், அதற்குள் எனக்கு உண்டான அன்பிற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/136&oldid=1582094" இலிருந்து மீள்விக்கப்பட்டது