உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

மறைமலையம் -14

பத்திரங்களைப் பார்த்துப் படியெடுத்தெழுதிக்கொண்டு சாட்சிக்காரரிடத்தும் என் மாமனாரிடத்துங் கையெழுத்தும் பெருவிரல் ஒப்பமும் வாங்கிக்கொண்டு சென்றார். அந்தப் பாரசிக்கனவானே அப்பத்திரத்திற் கண்டவற்றை நடப்பித்தற்கு அதிகாரமுடையவராக நியமிக்கப்பட்டதனால், அவற்றை என் மாமனார் அவர் கையிலேயே கொடுத்துவிட்டார். அப்பத்திரத் திற் கண்டவற்றைப் பெயர்த்தெழுதிய மூன்று வேறு கடிதங்களில் ஒன்று என்னிடத்தும், மற்றொன்று என் தமயனிடத்துந் தரப்பட்டன; மூன்றாவது பிரதி என் மைத்துனனுக்காக அப்பால் வைத்துவிடப்பட்டது. என் மைத்துனன் இச்சமயத்தில் கூட இருந்தால் ஏதேனும் வம்பு செய்வானென்றெண்ணியே அவனை ஏதோ ஒருகாரியமாக என் மாமனார் பகல் பன்னிரண்டு மணிக்கே வெளியில் அனுப்பி விட்டார். ஆகவே, இப்போது நடைபெற்று முடிந்த ஏற்பாடு அவனுக்காவது அவன் அன்னை தமக்கைக் காவது சிறிதுந் தெரியாது. இத்தனை விரைவில் இவ்வளவு திறமாகவுந் திருத்த மாகவும் இதனை முடிக்கும்படி ஒழுங்கு செய்து என் தமயனை ஏவிய என் மாமனாரின் அறிவு நுட்பமும், அவர் ஏவியபடியே அப்பாரசிககனவான் உதவியைக்கொண்டு இத்தனையுஞ் செவ்வையாகச் செய்து முடிப்பித்த என் தமையனது நன் முயற்சியும், என் தமையனது வேண்டுகோளுக் கிணங்கி இவ்வரும்பேருதவியை சிறிதுங் காலந்தாழாமற் செய்த அப்பாரசிகப் பெருமானின் பெருந்தகைமையும் நம்மால் என்றும் பாராட்டற் பாலனவாயிருக் கின்றன. தன்வயிற்றிற் பிறந்த மக்களுக்குக் கொடுத்ததைவிட இரண்டு பங்கு மிகுதியாய் எனக்கும் என் தமையனுக்குந் தமது சொத்தைப் பங்கிட்டுக் காடுத்த என் மாமனாரின் செயற்கருஞ் செயலுக்கு நானும் என் தமையனும் எழுமை எழுபிறப்பும் நன்றி செலுத்துங் கடமைப்பாடு உடையவர்களாய் இருக்கின்றோம்.

இக்காரியம் முடிந்ததும் நியாயதுரந்தார் இருவரும் பதிவு செய்வோரும் எங்கள் எல்லாரிடத்தும் விடைபெற்றுக்கொண்டு ஏகினர். “இப்பெருங்காரியம் எப்போது முடியும்! எப்போது முடியும்!" என்று இதுகாறும் ஆவலோடு உயிர் தாங்கிக் காண்டிருந்த என் மாமனார், அது முடிவுபெற்றவுடன் மிகுந்த இளைப்புடையவராய்ப் படுக்கைமேற் சாய்ந்துவிட்டார். சிறிது நேரத்திற்கு முன்னெல்லாம் ஒருவாறு மகிழ்ந்திருந்த எங்கட்கு இப்போது ஆற்றொணாத் துயரம் உண்டானது. எல்லாரும் வாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/135&oldid=1582093" இலிருந்து மீள்விக்கப்பட்டது