உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

105

உன் தமையனாரை நேற்று எங்களிடம் அனுப்பியிருந்தார். நியாய நூற் கல்வியிற்றேர்ச்சி பெற்ற இருவரை அதற்காகத்தான் இப்போது அழைத்து வந்திருக்கின்றோம். இன்னுஞ் சிறிது நேரத்திற்குள் பத்திரம் முதலியவையெல்லாம் எழுதிமுடியும்’ என்று விளம்பினார்.

யான் மீண்டும், “அம்மா, பணச்செலவைப் பற்றிய துன்பந் தங்களுக்கு நேராதாயினும், என்னால் வேறுபல துன்பங்கள் விளையுமே என்றுதான் யான் நிரம்பவுங் கலங்குகின்றேன்” என்றேன்.

66

அவைகளைப்பற்றி அக்கரையில்லை. என்ன துன்பம் வந்தாலும் நாங்கள் உன்மேல் வைத்திருக்கும் அளவிறந்த அன்பினால் அவைகள் துன்பமாகத் தோன்றமாட்டா” என்று அவ்வம்மையார் அன்போடு கூறினார்கள்.

இந்தப்பேச்சு முடிந்த அந்த நிமிஷத்தில், என் தமையன் அறையுளிருந்து வெளியே எங்களிடம் வந்து, எழுதிமுடித்த சொத்து பங்கீட்டுப்பத்திரத்தைப் படித்துக்காட்டப் போகிறார் களாதலின் அதனைக் கேட்கவரும்படி எங்களிருவரையும் உள் அழைத்தான். அதற்கிசைந்து நாங்கள் உள்ளே சென்றோம். என் மாமனார் அப் பராரசிகப் பெருமாட்டியாரை ஒரு நாற்காலியில் அமரும்படி அன்போடு குறிப்பித்தார்.எங்களினத்தவரான நியாய நூற்பண்டிதர் இருவர் கூட இருந்தமையால் என்னையிருக்கும்படி கற்பிக்கவில்லை. அந்தக் குறிப்பைத் தெரிந்துகொண்டு அவ்வம்மையார் அமர்ந்திருந்த நாற்காலியைப்பிடித்துக் கொண்டு அவர் பக்கத்தில் நின்றேன். என் மாமனார் தமது குடும்பத்தார்க்கு இருபதினாயிர ரூபாயும், என் தமையனுக்கு நாற்பதினாயிர ரூபாயும், எனக்கு நாற்பதினாயிர ரூபாயும் பகுத்துக் கொடுத்திருக்கும் வகைகளையும் அப்பங்குகளுக்குரிய சொத்தின் வகைகளையும் தெளிவாகக்காட்டி தெளிவாகக்காட்டி எழுதிய சீட்டுகளை நியாய நூல்வல்ல அவ்விருவரில் ஒருவர் படித்துக் காட்டினர். அவற்றில் எழுதப்பட்டவையெல்லாம் எங்களுக்கு இசைவா யிருத்தலை அறிந்தபின் என் மாமனார் சிறிது நிமிர்ந்த நிலையிற் பிடிக்கப்பட்டுக் கையெழுத்திட்டார். அப் பாரசிககனவானுஞ் சட்ட நூல் வல்லாருஞ் சான்றாகக் கையெழுத்து செய்தனர். இவை முடிந்த சமயத்தில் அரசினரால் அனுப்பப்பட்டு பதிவு செய்யும் அலுவல் பார்ப்பவர் வந்து சேர்ந்தார்; அவர் அப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/134&oldid=1582092" இலிருந்து மீள்விக்கப்பட்டது