உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

மறைமலையம் -14

பற்றிய சில இரகசியங்களை இன்னும் உங்களுக்குச் சொல்லா மலிருக்கின்றேன்; சொல்லச் சமயம் வாய்க்கவில்லை” என்று சொல்லுகையில் நாணத்தினால் மேலும் பேசமாட்டாமல் தலை கவிழ்ந்து கொண்டேன்.

என்மேல் அன்பாற்கனிந்த அவ்வன்னையார், “குழந்தாய், நீ எதற்காக வெட்கப்படுகிறாய் என்பது எனக்குத் தெரியும். நீ அதற்காக வெட்கப்பட வேண்டாம். போனவாரத்தில், உன் தமையனார் நாலைந்துமுறை எங்கள் வீட்டிற்கு வந்து என் கணவரிடத்தும் என்னிடத்தும் மிகவும் அன்போடு அளவளாவி உன்னைப் பற்றிய செய்திகள் அத்தனையும் சொல்லிப் போனார். பெரிய ஐயா அவர்கள் உன்னாற் காதலிக்கப்பட்ட தெய்வநாயகம் என்பவருக்கு உன்னை மணஞ்செய்து கொடுக்கும்படி எங்களுக்குச் சொல்லியனுப்பினார்கள். நாங்கள் அங்ஙனம் நியமிக்கப்பட்டது எங்கள் பாக்கியந்தான் என்று நினைத்திருக் கின்றோம். பெரிய ஐயாவைப் போன்ற அவ்வளவு நல்லகுணம் வாய்ந்த ஒருவரை நீ மாமனாரகப் பெற்றதும் அங்ஙனமே எல்லா நற்குணங்களும் அமையப் பெற்ற ஒருவரை நீ தமையனாகப் நீ பெற்றதும் உனது புண்ணியமேயாம். குழந்தாய், அன்றொருநாள், நாங்கள் உன்னைக் கடற்கரையிற் கண்டதுமுதல் என் மூத்தமகளே உயிர் பெற்றெழுந்து 'கோகிலம்' என வேறுபெயர் வைத்துக் கொண்டு வந்துவிட்டனள் என்றெண்ணி, உன்னை அவள் மேல் வைத்த அன்பினும் மிகுதியான அன்போடு பாராட்டி வருகின்றோம். ஆதலால் உன் பொருட்டு எவ்வளவு செலவு நேர்ந்தாலும், எவ்வளவு வருத்தம் உண்டானாலும் அவற்றை யெல்லாம் ஒரு பொருட்டாய்க் கருதாமல், உன்னை நன்னிலையில் வைப்பதற்கே நாங்கள் உறுதி செய்திருக்கின்றோம்” என்று சொல்லுகையில்,

இடையே யான் “அம்மா, பணச் செலவைப்பற்றிக் கவலையில்லை; எங்கள் குலதெய்வமேயனைய என் மாமனார் எனக்கு நாற்பதினாயிர ரூபாவும் என் தமையனுக்கு நாற்பதினாயிர ரூபாவுந் தமது சொத்திற் பகுத்து எழுதிக் கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்” என்றுரைக்கையில் அவ்வம்மையார்,

66

ஆம். எனக்கும் அது தெரியும்; அங்ஙனந் தமது விருப்பத்தை எழுதி முடித்துப் பதிவு செய்யும் பொருட்டாகவே பெரிய ஐயா நியாய நூற்பண்டிதர் இருவரை அழைத்துவரும்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/133&oldid=1582091" இலிருந்து மீள்விக்கப்பட்டது