உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

103

வெளியே நின்ற என்னிடம் வந்து என்னை அணைத்து முத்தமிட்டார்கள்; உடனே அவர்களிருப்பதற்கு ஒரு நாற்காலி எடுத்து வந்து இட்டு, அதன்மேல் அவர்களை அமர்வித்து, அவர்கள் விருப்பப்படி யானும் ஒரு சிறு விசிப்பலகைமேல் அவர்கள் பக்கத்தில் இருந்தேன்.

உடனே னே என்னை நோக்கிக் “குழந்தாய், பெரிய ஐயாவுக்கு உடம்பின் நிலைமை எப்படியிருக்கிறது? யான் கேள்விப்பட்டதில் அவர்கள் பிழைத்தெழுவது அருமையென்று தெரிந்து, இவ்வளவுக்கும் நான் காரணமாயிருந்ததை எண்ணி எண்ணி என் நெஞ்சம் ஏங்குகின்றது!” என்று தம் அழகிய விழிகளிற் கண்ணீர் துளும்பத் துயரத்தோடுங் கூறினர்.

66

அச்சொற்களைக் கேட்டு யானுங் கண் கலங்கி 'அன்புருவான அம்மா, இந்த வீட்டில் நடந்திருக்குங் கொடுஞ் செயல்களை மட்டுந் தாங்கள் தெரிந்திருப்பீர்களாயின் என் மாமனாரின் நோய்க்குத் தாங்கள் ஓர் எள்ளளவுகூடக் காரணமாகமாட்டீர்களென்றும், அதற்கு என் மாமியும் நாத்துணாருமே நெடுகக்காரணமாய் வந்திருக்கிறார்களென்றும் அறிந்துகொள்வீர்கள். அக்கொடுஞ் செயல்களையெல்லாம் முந்தாநாளிரவுதான் என் அருமை மாமனார் வாயாற் கேட்டுணர்ந்தேன்; அற்புதமான சில காட்சிகளையுங் கண்டேன். இவற்றையெல்லாந் தங்களுக்குச் சொல்லவேண்டு மென்று நான் விரும்பியும், அவைகள் என் மாமனாரது குடும்பத்தைப் பற்றியன வாயிருத்தலால், அவருடைய கட்டளையின்றிச் சொல்ல அஞ்சுகின்றேன். இன்றைக்கு அவரிடம் உடன்பாடு பெற்றுக் கொண்டு நாளைக்கு அவற்றை உங்களுக்குத் தெரிவிக்கின்றேன்” என்று மெல்லிய குரலிற் கூறினேன். அச்சொற்களைக் கேட்டதும் அவ்வம்மையார் ஒருவாறு மனந்தேறியவராய், “நல்லது அம்மா, நம் அன்பிற்சிறந்த பெரிய ஐயா நம்மைவிட்டு விரைவிற் பிரிந்து போய் விடுவார்கள் போல் தோன்றுகிறதே! தோன்றுகிறதே! இவ்வளவு கொடுமையான இந்த இடத்தில் அவருக்குப் பின் நீ எவ்வாறு நீ இருந்து காலங் கழிப்பாய்” என்று பொருமலோடும் சொல்லினர்.

66

ஆம். அம்மா, அவருக்குப்பின் அரைநிமிஷமும் 'யான் இங்கிருக்க முடியாது. எனக்கு நீங்கள்தாம் புகலிடம். எனக்குத் தாயுந்தந்தையும் நீங்களும் ஐயாவுந்தாம். இப்படியே என் மாமனாரும் எனக்கு முந்தாநாள் இரவு சொன்னார்கள்.என்னைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/132&oldid=1582090" இலிருந்து மீள்விக்கப்பட்டது