உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

❖LDMMLDMOLD-14

சிறந்தவரன்றோ?" என்றுகூறினேன். இச்சொற்களை கேட்டு இவற்றிற்கு வகைசொல்லத் தெரியாதவனாய் அவன் சிறிது நேரம் வெட்கமுற்றுத் தலைகுனிந்த பிறகு, 'நல்லது, கோகிலா நீ சொன்னவையெல்லாம் சரி. பதவிகளால் வரும் பெருமை தன்னைச் சேராதென்றால், ஒருவன் தனக்குச் சொந்தமான பெருமையைத் தேடிக் கொள்வதற்கு வேறுவழிதான் எப்படி?” என்று கேட்டான்.

66

“நீயே நன்றாய் நினைத்துப்பார்த்து, உன்னறிவிற்பட்டதை எனக்குச்சொல், அதன்மேல் என்னறிவிற்குட்பட்டதை நான் சொல்லுகிறேன்” என்றேன்.

"பொருள் நிறைய இருந்தால் எல்லாப்பெருமையும் ஒருவனுக்குத் தானே வரும் என்று எனக்குப்படுகின்றது” என்று சற்று ஐயுறவோடு கூறினான்.

"உத்தியோகத்தால் வரும் உயர்வு உத்தியோகத்தோடு போய்விடுதல் போலப் பணத்தால் வரும் நன்கு மதிப்பும் பணத்தோடு போய்விடுமன்றோ? செல்வராயிருந்தகாலத்து நன்கு மதிப்போடு வாழ்ந்தவர்கள், அச்செல்வங்கெட்டு வறியராய்ப் போனபின் எல்லாராலும் அவமதிப்பாய் நடத்தப்படுதலை நீ பார்த்ததில்லையா? என்றேன்.

66

ஆமா, பலரைப் பார்த்திருக்கிறேன், உன் தாயைப் பெற்ற பாட்டனும் பாட்டியுங்கூடச் செல்வவான்களாயிருந்தபோது எவ்வளவோ பெருமையோடு வாழ்ந்தார்களாம்; அவர்கள் தரித்திரராய்ப் போனபிறகு எவ்வளவோ மதிப்புக்குறைச்சலாய் நம்மவர்களால் நடத்தப்பட்டார்களாம். அதனால், அவர்கள் நம்மவர் கண்களுக்குத் தென்படாமல் நீயும் நானும் சிறுபிள்ளை களாயிருந்த போதே எங்கேயோ போய்விட்டார்களாம்; உன் தாயோடுகூடப் பிறந்த உன்சித்தி சொல்லுக்கு அடங்காப் பேரழகு உடையவளாம்; அந்த அம்மாளுக்குக் கல்யாணமே ஆக வில்லையாம்; அந்த அம்மாளும் அவன் தம்பி ஒருவனும் அவர்கள் பெற்றோரு மெல்லாம் போன இடம் இன்னுந் தெரியவில்லை. காலஞ்சென்ற என் அப்பா, அவர்களைத் தேடிகொண்டுவரப் பலமுறை முயற்சி செய்தும் பயன்படவில்லை. இவ்வளவும் தரித்திரத்தால் வந்த மதிப்புக் குறைச்சல்தான்” என்று அவன் கூறுகையில், என் எண்ண மெல்லாம் என் சிற்றன்னை மேலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/145&oldid=1582112" இலிருந்து மீள்விக்கப்பட்டது