உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

117

பாட்டன் பாட்டி மேலும் என் தாய்மாமன் மேலும் செல்ல லாயின. இறந்துபோன என் மாமனாரும் மறைந்துபோன இந் நால்வரையும் பற்றிச் சிற்சில முறை என்னிடம் தெரிவித்ததுண்டு. மறைந்துபோன இவர்களைப் பற்றியே யான் தொடர்பாக நினைக்கலானமையால் மேலும் பேசமனமில்லாம லிருந்தேன். அன்றைக்கு அவ்வளவோடு என்மைத்துனனும் பேச்சை நிறுத்திக் கொண்டான். வறுமையால் துன்புற்று எங்கேயோ போய்விட்ட என் சிற்றன்னை முதலான நால்வரையும் பற்றி அன்று முதல் நிரம்பக் கவலையடையலானேன். என் கண்ணனையீர், தாங்கள் சிறுபருவமுதல் இத்தகைய துன்பங்களை அறியாம லிருப்பதுப் பற்றிச் சிறிது பொறாமையடைலானேன். இப்போது தான் என்னாற் சிலதுன்பங்களை அடைந்தீர்கள்! யானோ என் இளந்தைப் பருவமுதல் கவலைக்குந் துன்பத்திற்கும் அவ மதிப்புக்கும் ஆளாயிருந்து புழுங்கிவருகின்றேன். இவ்வளவு தீமைக்குங் காரணம் என்னென்றாற் பழவினையேயென்று பலருஞ் சொல்லுவார்கள். ஆனால், எனக்கது பொருத்தமாகத் தோன்ற வில்லை. பழவினைக்குக் கண்ணுங் காலுங் கையுமா இருக்கின்றன? அது தானே எதனையும் அறிந்து செய்யத்தக்க அறிவுடையதா? அப்படி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லையே. ஏதோ மேற் பிறவியிற்பழகிய பழக்கங்களால் இப்பிறவியிலும் நாம் அப்பழக்கத்துக்கு தக்கபடி நடக்கிறோம் என்பதை மட்டும் நான் ஒருவாறு ஒத்துக்கொள்கிறேன். ஆனால், இப்பிறவியில் நாம் அடையுந் துன்பங்கள் பெரும்பாலனவற்றிற்கு நாமும் நம்மைச் சேர்ந்தவர்களும் செய்து வரும் புதுவினையே உண்மை யான காரணமென்று ஆழ்ந்து ஆராய்ந்து பார்க்குந்தோறும் யான் அறிகின்றேன். பெரும்பாலும் ஆண்மக்களாயிருப்ப வர்கள் தாமே எல்லா நன்மைகளையும் அடையவேண்டு மென்னும் நோக்கத்தினாற் பெண்மக்களைப் பலவகையான கட்டுப்பாடுகளுக்கு உள்ளாக்கி யிருக்கின்றார்கள். இந்தக் கட்டுப்பாடு களெல்லாந் தமது நலத்தையே கருதிச் செய்தமை யாற், கடைசியாக இவைகளே அவர்களையும் அவர்களைச் சார்ந்த பெண்மக்களையும் பெருந் துன்பத்தில் அமிழ்த்தி விடுகின்றன. ஒருவர் தமது நன்மையையே கருதும்போது, பிறருக்கு அதனால் உண்டாகுந் துன்பம் அவருக்கு தோன்றாமற் போகின்றது. தம்மைவிட்டுப் பிறரை நினைக்க மாட்டாமையின் அதனால் அவருக்கு விரிந்த நோக்கமும் விரிந்த அறிவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/146&oldid=1582114" இலிருந்து மீள்விக்கப்பட்டது