உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணமகன்

கோகிலாம்பாள் கடிதங்கள்

கிடைக்கவில்லையே!

119

புல்லிய நன்மையையே நாடி அம்மகவுக்கு எவ்வகையிலும் ஒவ்வாத ஒருவன் காலிற் கட்டிவிடுங் கொடிய பொல்லாங்கை என்னென்றுரைப்பேன்! என் பெருமானே, இப்பொல்லாங்கின் பொருட்டாகவன்றோ எல்லா இரக்கமும் உடை உடைய நம் இறைவன் அவர்களைக் கடுமையாகத் துன்புறுத்தி வருகின்றான். ஐயோ! நங்குழந்தை மங்கைப்பருவம் அடையும் நாள் இன்றோ நாளையோவென்று நெருங்குகின்றதே! என் செய்வோம்! நமது முடைதெரிந்து நங்குழந்தையைக் கேட்கவரும் சிற்சிலருங்கூடப் பதினாயிரம் ரூபா சீதனங் கிடைக்குமா? இருபதினாயிரம், ரூபா கிடைக்குமா என்று நெஞ்சில் ஈரமில்லாமற் கேட்கின்றார்களே! கேட்டபொருளைக் கொடுத்துவிடலாமென்றால் நமது பிழைப்பிற்கே அவ்வளவு பொருள் இல்லையே! கடன் வாங்கிக் கொடுக்கலா மென்றால் நம்மை நம்பி அத்தனை பெரியதொகை எவர் நமக்குக் கொடுப்பார்கள்?' என்று ஏங்கி ஏங்கி மனம் நையுந் தாய்தந்தையர் எத்தனைபெயர்!" தமக்காகத் தாய்தந்தையர் படும் மனத் துயரத்தை கண்டு உள்ளந்தாங்காமல் வெந்து தமது உயிரையும் வெறுத்து உயிர் துறந்த கன்னிப் பெண்கள் எத்தனை பெயர்! அல்லது தங் கையில் இருந்த பொருளையெல்லாந் தாம் பெற்ற பெண்களுக்கு இங்ஙனஞ் சீதனமாகக் கொடுத்துவிட்டுத் தள்ளாத முதுமைக்காலத்தில் வறுமை கொண்டு பட்டினியும் பசியுமாய்க் கிடந்துமாளும் பெற்றோர்கள் எத்தனை பெயர். மேலும், எங்களவர்களிற் பல அலுவல்களில் அமர்ந்திருப்பவர் களெல்லாம் தாம் மணஞ்செய்து கொள்ளாதிருந்த போதும், மணஞ்செய்தும் பெண்மக்களைப் பெறாதமுன்னும் முறை தவறாமல் கூடியவரையில் ஈரநெஞ்சம் உடையவர்களாய் நடக்கின்றார்களெனவும், ஆனாற் பெண்மக்களைப் பெற்ற வுடனே சீதனங்கொடுக்க வேண்டுவதை எண்ணிப் பலரை வருத்திக் கைக்கூலி வாங்கத் துவங்குகின்றார்களெனவும், தாம் கைக்கூலி வாங்குவது மேலுள்ளார்க்குத் தெரிந்தால் தமது அலுவலை இழந்தும் சிறையில் அடைபட்டும் பெரிதுந் துன்புறுகின்றார் களெனவும் அடிக்கடி கேள்விப்பட்டு வருந்தியிருக்கின்றேன். இவைகளையெல்லாம் எண்ணிப் பார்க்குங்கால், எங்களவர் தமது நலத்தையே கருதிச் செய்த பொருந்தாக் கட்டுப்பாடுகளும் பொருள்மேல் வைத்த பொல்லாத பற்றுதலும் அல்லவோ இவ்வளவு துன்பங்களுக்கும் பிறப்பிடமாய் இருக்கின்றன!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/148&oldid=1582116" இலிருந்து மீள்விக்கப்பட்டது