உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121

கடிதம் −11

என் ஆரூயிர்க்குயிராய்த் திகழும் அன்புள்ள பெருமானே,

நேற்றுப் பிற்பகல் யான் தங்கட்கு எழுதிய கடிதங் கிடைத்திருக்குமென்று நம்புகின்றேன். அக்கடிதத்தை முடி க்குந் தறுவாயில் என்னைக் காணவந்தவர்கள் வேறு யாரும் அல்லர், அந்தப் பாரசிகப் பெருமாட்டியாரேதாம். அவர்களும் அவர்களின் சிறிய மகன் ஒருவனும் மட்டுமே வந்தார்கள். சென்ற ஒரு திங்களாக என்னைக் காணாதிருந்தமையால் மெத்த மனம் வருந்தின அந்த அம்மையார் என்னைக் கண்டவுடனே, நெடுநாட்காணாது போன தன் கன்றைத் தேடித்தேடித்திரிந்த ஆவானது அதனைத் திரும்பவுங் கண்டால் எவ்வளவு ஆற்றாமை யோடு அதனிடம் அன்பு பாராட்டுமோ அதுபோலவே என்னை மார்போடு அணைத்து அணைத்து முத்தம் வைத்துக் கண்ணீர் சிந்தினார்கள். யானும் மனம் உருகாமல் இருக்கக்கூடவில்லை. ங்ஙனம் இருவேமுக்கும் நேர்ந்த ஆற்றாமை சிறிது தணிந்தபின், அவ்வம்மையார்.

"கண்மணி, சென்ற ஒருமாதகாலமாய் யான் உன்னைக் காணாமையால் உண்டான வருத்தத்தை இப்போது உன்னைக் கண்டு நீங்கப்பெற்றேன். இனி உன்னைக் காண எத்தனை நாளாகுமோ என்பதை நினைக்க என் நெஞ்சம் நீராய் உருகிப் போகின்றது! என் செய்வேன்! ஏதும் நம் கையில் அகப்பட்டதாய் இல்லையே!" என்று உரைத்தார்கள்.

இந்த வீட்டில் உள்ளவர்களின் பொருட்டுத் தாம் வரக்கூடா திருப்பதை நினைத்து இங்ஙனஞ் சொல்லு கின்றார்களாக்குமென்று எண்ணினவளாய், “என் அம்மா, இந்த வீட்டில், எனக்கு முன் இருந்த துன்பம் இப்போது இல்லை. என் மாமனார் எனக்கு நாற்பதினாயிரம் ரூபாவும் என் தமையனார்க்கு நாற்பதினாயிர ரூபாவும் எழுதி வைத்திருப்பதை இங்குள்ளவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/150&oldid=1582119" இலிருந்து மீள்விக்கப்பட்டது