உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

❖LDMMLDMOLD -14❖

சென்ற பத்து நாளாகத் தெரிந்திருக்கிறார்கள். பெருந்தொகை யான பொருள் எங்கள் இருவர் கையிலுஞ் சிக்கிக்கொண்டதைப் பற்றி இவர்கள் உள்ளுக்குள் மிகுந்த வேக்காளம் உடையவர் களாய் இருந்தாலும் அதனை வெளிக்காட்டாமல் என்னை நல்லதனப்படுத்தி அப்பொருள் முழுமையும் என்னிடத்தினின்றும் பிடுங்கிக் கொள்வதற்கு ஏதேதோ சூழ்ச்சிகள் செய்கிறார்கள். இப்போது எவரேனும் என்னிடம் வந்து பேசினாலும் இவர்கள் முகக் கடுகடுப்பு காட்டுகிறதில்லை. என் தமையனாரும் என்னிடம் தனியே வந்து நாலைந்து நாளாய்ப் பேசிப்போகிறார்; அதற்கும் இவர்கள் ஒன்றுஞ் சொல்வதில்லை. இவையெல்லாம் என் தமையனார் தங்களிடந் தெரிவித்திருப்பா ரென்று நம்புகின்றேன்” என்று யான் கூறுகையில், அப்பெருமாட்டியார் “ஆம், ஆம்” என்று தலையசைத்து “எல்லாம் அவர் வந்து சொன்னார்; அதனாலே தான், யானுந் துணிந்து இன்றைக்கு வந்தேன்” என்று அவர்கள் கூற, 'இங்ஙனமே தாங்கள் ஒழிவுள்ள போதெல்லாம் இங்கே வந்து செல்லலாமே" என்றேன்.

“இல்லை, கண்மணி, நாளை மாலை வண்டியில் நாங்கள் எல்லாரும் பம்பாய்க்குப் போகவேண்டியதாயிருக்கிறது!” என்று வருத்தத்தோடு கூறினார்கள்.

66

திடீரென்று இங்ஙனம் புறப்பட வேண்டியது ஏன்? அம்மா” என்றேன்.

66

“என் கணவனார்க்கு ஒரேஒரு தமையனார் உண்டு. அவர் ஒரு பெரிய வியாபாரி.திரண்டபொருள் உடையவர். அவர்க்குப் பிள்ளை இல்லை. அவர் சிலநாட்களாக நோயாய் இருந்தார். உரத்த உடம்புடையவர் ஆகையால் அவர் நோயிலிருந்து நலம் பெற்று எழுந்திருப்பாரென நினைத்தோம். ஆனால், அவரைப் பார்க்கும் வைத்தியர்கள் எல்லாரும் இன்னும் நான்கு நாளில் அவர் இறந்து போவார் என்று உறுதி சொல்லிவிட்டார்களாம். அவர் எங்கள் எல்லாரிடத்தும் மிகுந்த அன்புள்ளவர்; நாங்களும் அவரிடத்தில் அங்ஙனமே மிகுந்த அன்புவைத்திருக்கின்றோம். உடனே புறப்பட்டுவரும்படி இன்றைக் காலையில் தந்தி வந்தது. காலை முதல் ஐயா அவர்கள் இங்கே கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்கு படுத்தி முடிக்கும் பொருட்டு வெளியே போயிருக் கிறார்கள். வெளியே போகும்போது, உன்னிடம் எல்லாஞ் சொல்லிவிட்டு வரும்படி எனக்குக் கற்பித்துப் போனார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/151&oldid=1582121" இலிருந்து மீள்விக்கப்பட்டது