உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

123

நாளைக் கட்டாயம் நாங்கள் புறப்படவேண்டியதுதான் என்றார்கள்.

66

'அமா, அப்படியானால் நீங்கள் எல்லாருந் திரும்பி இந்த ஊர்க்குவருவது எப்போது?” என்று கவலையோடு வினாவினேன்.

66

"குழந்தாய், அதைப்பற்றி நானும் ஐயா அவர்களைக் கேட்டதில் அவர் தம் தமையனார் பம்பாயில் நடத்தி வந்த பெரிய வியாபாரத்தை நடத்தவேண்டியிருப்பதோடு அங்குள்ள சொத்துக்களையும் மேற்பார்க்கவேண்டி வருமாதலால், இங்கே திரும்பி வருவது முடியாதென்று சொன்னார். ஒருகால் திரும்பி வந்தாலும், இங்கே அவரவர்கள் தரவேண்டிய நிலுவையைத் தண்டல் பண்ணுவதற்குத் தாம் மட்டும் வரவேண்டிய திருக்குமாம்; அதுவுங்கூடத் தாம் வராமல் தம் கணக்கப்பிள்ளை களைக்கொண்டும் செய்துவிடலாமாம்" என்று அவ்வம்மையார் சொல்லுகையில்,

“அப்படியானால் யான் திக்கற்ற பாவியாயினேனா! என்று கண்ணும் மனமுங் கலங்கிக் கூறினேன்.

யான் கலங்கியதைக் கண்டு மனம்பெறாமல், அன்பே உருவான அப்பெருமாட்டியார், “குழந்தாய், கண்கலங்க வேண்டாம். உன்னை நாங்கள் அப்படி விட்டுவிடுவோமா! யாங்கள் பெற்ற பிள்ளைகளினும் உன்னைப் பன்மடங்கு மேலான அன்புடன் பாராட்டுகின்றோம். திடீரென்று உன்னைப் பிரிந்து போகநேர்ந்தது பற்றி யாங்கள் மிகுந்த துயரம் அடைந்தோம் என்றாலும், இன்னுஞ் சிலநாட்களில் உன்னையும் உன் தமையனையும் பம்பாயில் எங்கள் இருப்பிடத்திற்கு வரவழைத்துக் கொள்ள ஏற்பாடு செய்திருப்பதனால் ஒருவாறு ஆறுதல் அடைந்தோம்' என்று என் கண்களைத் தமது பட்டாடையால் துடைத்துக் கொண்டேசொல்லினார்கள்.

"அப்படியானால், என் தாயே, இன்னுஞ் சில நாட்கள் சென்று என்னை நீங்கள் வருவித்துக் கொள்வதை விட, இப்போது கூடவே என்னை அழைத்துச் சென்றால் என்ன? என்று வினாவினேன்.

66

“இன்று காலையில் உன் தமையனாரோடு கூட அதைப் பற்றி சற்றேறக்குறைய ஒருமணிநேரம் வரையிற் பேசினோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/152&oldid=1582122" இலிருந்து மீள்விக்கப்பட்டது