உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

201

தான் இருந்தது. அக்கூரை வரவரச் சரிந்து கீழே நிலத்தில் வந்து கூடும் இடத்தில் மற்றும் ஒருசிறு கட்டிடங் காணப்பட்டது.அஃது யாதென்று காண அதனருகே சென்றேன். அது மனிதனாற் சமைக்கப்பட்ட கருங்கற் சுவர்கள் இருபுறத்தும் எதிரிலும் உள்ள தாயிருந்தது. எதிரேயுள்ள சுவரில் ஓர் ஆள் நின்றபடியாய்ச் செல்லத் தக்க ஒருவாயிலும், அதிற் பருத்த இரட்டைக் கதவுகளும் இருக்கக் கண்டேன். உற்று நோக்க அஃதொரு சிறு கோயிலாய்த் தோன்றியது.அதனைக் கண்டதுங் கடவுளையே நேரிற் கண்டாற் கொண்டு அதன்கிட்டச் சென்று

போல் மனக்கிளர்ச்சி

பார்த்தேன். இரண்டு கதவுகளும் நன்றாய் இறுகப் பூட்டப்பட்டிருந்தன. அக்கோயிலின் உள்ளே தண்ணீர் ஓயாமல் விழும் ஒலி கேட்டது. அதுகேட்டு வியப்புற்று உள்ளுள்ளதை நோக்க முயன்றேன். அக்கதவினிடையே காணப்பட்ட

சாவித்தொளையினூடே பார்வையைச் செலுத்தினேன். உள்ளே விளக்கொன்று எரிந்தது. அழகிய காளி யம்மையின் கற்சிலை வடிவம் ஒன்று பிற்சுவரின் அருகே நிறுத்தப் பட்டிருந்தது. அதனைக் கண்டதும் மனங் கரைந்து தொழுதேன். உள்ளே மற்றொரு வியப்பான நிகழ்ச்சியுங் காணப்பட்டது.அம்மையின்

முடிமேல் தண்ணீர் சொட்டுச் சொட்டாய் ஓயாமல்

மேற்கூரையிலிருந்து வடிந்துகொண்டேயிருந்தது. அதனோடு அம்மையின் பின்புறத்தே தண்ணீர் குடத்தினின்று சாய்க்கப் பட்டாற்போல் ஓயாமல் மிகுதியாய் விழுந்து ஓடும் ஓசையுங் கேட்டது. அதற்கு மேல் அக்கோயிலின்உள்ளே ஒன்றுங் காணக் கூடவில்லை. அதனால், அம்மையை வணங்கிக்கொண்டு இப்புறந் திரும்பினேன். அதற்கு எதிரே ஒரு சிங்கத்தின் கற்சிலை வடிவம், அதற்கு முன்னே அகன்ற ஒரு வேள்விக் குண்டமும் இருந்தன. இவ் வடையாளங்களையெல்லாங் கண்டபின் அவ்விடம் ஒரு கோயிலே எனவும், எங்களைச் சிறைபிடித்து வந்த கள்வர்கள் தமது களவுத் தொழில் நன்கு நடைபெறல் வேண்டி வழிபடுங்காளி கோட்டமே அதுவெனவும் அதற்குள் யான் யான் சிறையாக வைக்கப்பட்டிருக்கின்றே னெனவுந் தெளிவாக அறிந்து காண்டேன். அவ்விடம் முற்றுஞ் சுற்றிப்பார்க்க எங்கும் அடைப்பாகவே இருந்தது. அக்கோயிலின் எதிரே ஐம்பதடி எட்டி இருபுறத்து மலையும் வரவரக் குறுகிக் கோணமாகும் இடத்தில் மற்றும் ஒரு சிறுவாயில் இருந்தது. அதன் ஊடு ஓர் ஆள் குனிந்துதான் செல்லல் வேண்டும். அவ்வாயிலுந் திணிந்த பலகைக்

டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/230&oldid=1582408" இலிருந்து மீள்விக்கப்பட்டது