உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

மறைமலையம் -14

டம்

முண்டைச்சியைத் தான் நாம் கொண்டு போகவேண்டியது. இந்தப் பார்சிக்காரியும் அவள் மகளும் நமக்கு வேண்ட ாம்' என்று அப்போது அவர்கள் சொல்லிய சொற்களை ஆராய்ந்து பார்க்கப் பார்க்க, 'என்னைக் கைம்பெண் என்று அவர்கள் எப்படியறிந்தார்கள்? இஃது ஏதோ பெரிய இரண்ட கமாக இருக்கின்றதே!ஓ! நாங்கள் வண்டியில் ஏறும்போது அந்தச் சேது ராமன் என்பவன் பாரசிகப் பெருமானுடன் வந்து பேசி விரைவில் அவரைவிட்டுச் சென்றான்! அவன் இந்தக் கள்வர் கூட்டத்திற் சேர்ந்தவனாயிருக்கலாமோ! என்று பலவாறு எண்ணினேன். துயரமாவது துன்பமாவது அளவுக்கு மிஞ்சிப் போய்விட்டால், மன கலக்கமாவது கண்ணீராவது வருவதில்லையென்று பெரியோர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். எனது நிலைமையும் அப்போது அப்படியாகவே யிருந்தது.யாதுவரினும் வருக! ஏழை எளிய எனக்கு இறைவனே துணை! என்னும் ஒரு மனத்துணிவு வரப்பெற்றேன். அதன்பின், ‘இங்கே இவ்வாறு எண்ணமிட்டுக் கொண்டிருப்பதிற் பயனில்லை. இந்த இடத்தை விட்டு வெளியே போக வழியுண்டா? என்று பார்க்கலாம்’ என்னும் நினைவுகொண்டு எழுந்தேன். யான் அப்போதிருந்த இ அக்குகையின் ஒருபுறத்து மூலை, அகல நிகளத்திற் பத்தடி இடமுள்ளதாய் இருந்தது; இருபுறத்துச் சுவர்களும் மூலையாய்க் குவிந்து கூடிய இடத்தில் யான் எழுந்து நிற்க இயலாதபடி தலைக்குமேற் கூரைபோலிருந்த கற் பாறையுஞ் சரிவாய் வரவரத் தாழ்ந்திருந்தது. அம் மூலையிற் காணப்பட்ட சிறுபிளவினூடே தான் வெயில்வெளிச்சம் நுழைந்து தோன்றிற்று. அம்மூலையி லிருந்து இரு சுவர்களும் வரவர அகலும் பக்கத்தில் ஏறக்குறைய அதற்குப் பத்தடி எதிரே காட்டுமரப் பலகையடைப்பும், அதில் ஓா ஆள் ஊர்ந்து நுழையத்தக்க ஒரு சிறுவாயிலும், அதற்கொரு கதவும் இருந்தன. யான் அக் கதவண்டை சென்று அதனைத் திறக்க, அஃது எளிதில் திறந்தது. அதனூடு நகர்ந்து அப்புறஞ் சென்றேன். சென்று மெல்லென எழுந்துநின்றேன். அங்கும் மங்கலான வெளிச்சம் இருந்தது. அங்குள்ள மேற்கூரை உயரமாயிருந்தது. அவ்விடம் அகன்று அகல நிகளத்தில் நாற்பது ஐம்பதடி அளவுள்ளதாய் நேர்த்தியாய் இருந்தது அவ்விட மனிதர்களால் அமைக்கப்பட்ட தன்றுமலைகளின் இயற்கை யமைப்பின் னுள்ளேயே அஃது அவ்வளவு அழகாய் அமைந் திருந்தது. அதன் மேற் கூரையும் இயற்கைக் கற்பாறையாகவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/229&oldid=1582399" இலிருந்து மீள்விக்கப்பட்டது