உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

199

என்று வசைமொழி சொல்லிப் பிறகு இந்தப் பார்சிக்காரியும் அவள் மகளும் நமக்கு வேண்டாம். இவ்விருவரையும் அவர்கள் இருப்பிடத்திற்கு அனுப்பி விடுவோம். ஆனாலும் இவர்கள் நடுவிலே விழித்துக் கொள்ளாதபடி இவர்கள் மூக்குகளிலும் அந்த மருந்தைப்பிடி” என்று உறுத்திச் சொன்னான். தமிழ் தெரியாத இந்த நாட்டில் இக்கள்வரிற் பலர் வேறு மொழிகளைப் பேசத், தமிழ்ப் பேசும் இவ்விருவர் மட்டும் வேறு யாராயிருக் கலாம் என்னும் ஓர் ஆராய்ச்சி நினைவு சோர்ந்துகிடந்த என் மூளையில் அப்போது உண்டாவதாயிற்று. அந்நேரத்தில் ஒருவன் ஏதோ ஒன்றை என் மூக்கிற் பிடித்தான். பிடித்ததும் யான் உணர்வற்றவளானேன். அதற்குப் பின் நடந்தது இன்னதென்று யான் அறியேன்.

மறுபடி நான் மயக்கம் நீங்கி உணர்வு பெற்றுக் கண்விழித்துப் பார்க்க ஒரு மலைக்குகையினுள்ளே யான் இருக்கக் கண்டேன். என்னைத் தவிர வேறு யாரும் அங்கே காணப்பட வில்லை. அந்தப் பாரசிக கனவானையும் என் தமையனையுங் காணேன். முதலில் யான் கனவுதான் காண்கிறேனோ என எண்ணினேன்.பகலவன் வெளிச்சம் அக்குகையின் ஓர் இடுக்கின் வழியாய் நுழைந்து யான் இருந்த இடத்தின் இயல்பை எனக்கு விளங்கக் காட்டியது. என்னைச் சுற்றியுள்ள சுவர்களைத் தொட்டுப் பார்த்தேன். அவைகள் எல்லாம் வலிய கற்பாறை களினால் இயற்கையில் அமைந்தனவாயிருந்தன. இதனால்யான் காண்பது கனவன்று, நனவே எனத்தெளிந்தேன். நேற்றிரவு மின்னல் வீச்சுப்போல் அடுத்தடுத்துத் தோன்றிய திகிலான நிகழ்ச்சிகள் அவ்வளவும் ஒன்றன்பின் ஒன்றாய் என் நினைவுக்கு வந்தன. தாயினும் அருள் மிக்க அப்பாரசிகப் பெருமாட்டியார் எப்படியானார்! அவர் தம் மூத்தபெண் எவ்வாறானாள்! யான் இங்கே எப்படி வந்தேன்! என்று எண்ணலானேன். நேற்றிரவு எங்களை வந்து வழிமறித்தவர்கள் கள்வரானால் என் காதிலுங் கழுத்திலுங் கையிலும் இடுப்பிலுங் காலிலும் அணிந்திருந்த உயர்ந்த அணிகலங்களையெல்லாம் அவர்கள் கவர்ந்து கொள்ளாதது ஏன்? அவர்கள் நோக்கம் யாது! அவர்கள் என் வண்டியின் அருகில் வந்தபோது யான் அரைவாசி யுணர்வோ டிருந்தேன். ஆகையால் அவர்களில் இருவர் அப்போது தமிழிற்பேசிய சொற்கள் என் நினைவுக்கு வந்தன. 'இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/228&oldid=1582391" இலிருந்து மீள்விக்கப்பட்டது